அறிமுகத்திற்கு முன்னரே புக்கிங்கை குவிக்கும் உள்நாட்டு இ-ஸ்கூட்டர்... அறிமுகம் எப்போது...?
உள்நாட்டு மின்வாகன தயாரிப்பு நிறுவனமான லி-அயன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வர்த்தகம் மற்றும் தனியார் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான ஸ்போக் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

லி-அயன்ஸ் எலக்ட்ரிக் என்ற மின் வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் ஸ்போக் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இ ஸ்கூட்டருக்கு ரூ. 65 ஆயிரம் என்ற ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் எஞ்ஜின் மற்றும் பேட்டரி போன்றவற்றின் தகுதியைப் பொருத்து ரூ. 99 ஆயிரம் வரையிலான விலையை இந்த ஸ்கூட்டர் பெற இருக்கின்றது.

லி-அயன்ஸ் எலக்ட்ரிக் ஓர் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இது, தற்போது தயார் செய்திருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், தனி நபர் மற்றும் வர்த்தக ரீதியாக இயங்கும் துறைகள் ஆகிய இருவிதமான பயன்பாட்டிற்கும், உபயோகிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மின்வாகன சந்தை முயல் வேகத்தில் வளர்ந்து வருகின்றது. அந்தவகையில், உள் மற்றும் வெளிநாடுகளில் இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் மின் வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. ஆகையால், தற்போது இந்தியாவில் அண்மைக் காலங்களாக புது புது பிராண்டின் மின் வாகனங்கள் அறிமுகமாகி வருகின்றன.

அதேசமயம், இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் மின் வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கின்றது. மேலும், பெரும்பாலான மின் வாகனங்கள் அதன் வாகனங்களைக் குறைந்த பெர்ஃபார்மென்ஸ் வாகனமாகவும், ஓர் நல்ல ரேஞ்சை தரும் வாகனமாகவும் களமிறக்கி வருகின்றன.

அதேசமயம், குறைவான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ரேஞ்சுடைய எலக்ட்ரிக் வாகனங்கள்கூட அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றன. ஆகையால், லி-அயன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின் வாகனங்கள், இதுகுறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளை உள்ளடக்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இது உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, இந்த ஸ்கூட்டரில், ஸ்வாப்பிங் (கழட்டி சார்ஜ் செய்ய பின்னர் மீண்டும் பொருத்திக்கொள்ளுதல்) திறன் கொண்ட 2.9kWh லித்தியம் அயன்-பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் பிரஷ்லஸ் டிசி ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 2.1kW மற்றும் 1.2 kW சக்தியை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது, ஸ்கூட்டரை மணிக்கு 45கிமீ என்ற வேகத்தில் செலுத்த உதவும். பேட்டரியின் திறனானது, வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது.
அந்தவகையில், 50 முதல் 130 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய திறன் கொண்ட பேட்டரிகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து லி-அயன்ஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இயக்குநர் குர்விந்தர் சிங் கூறியதாவது, "தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் பசுமை வாகனங்களின் இயக்கம்ம நிச்சயம் தேவையான ஒன்றாக மாறி வருகின்றது. இதன்காரணமாகவே, மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழும் வகையில் புதிய இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய இருசக்கர வகான சந்தையில் அறிமுகம் செய்துள்ளோம். வெகுஜன மக்களை, சுற்றுப்புறச்சூழலின் நண்பனான மின்வாகன பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே எங்களுக்கு இலக்கு" என தெரிவித்தார்.

லி-அயன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த இ-ஸ்கூட்டர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின்மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 100 சதிவீதம் இந்தியாவிலேயே தாயாரனதாக இருக்கின்றது. மேலும், இந்த இ-ஸ்கூட்டர்கள் அறிமுகத்திற்கு முன்பே, விற்பனைக்கான முன் பதிவுகளை அள்ளிக் குவித்துக் கொண்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்போக் அழகான அடிப்படை வடிவமைப்பு மற்றும் ஸ்டைலைப் பெற்ற மாடலாக இருக்கின்றது. இதன் முன்பக்கத்தின், மேற் பகுதி மிகவும் ரம்மியமாக இருக்கின்றது. அதேபோன்று, மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் வட்டவடிவிலான ஹெட்லேம்ப் வெளியேப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பின்பகுதியில் பார்சலை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக கார்கோ பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டயிலேயே சைட் இண்டிகேட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், இந்த பெட்டியைக் கழட்டிவிட்டு இருவர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கையைப் பொருத்திக் கொள்ளும் வசதியும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இதனை வர்த்தக ரீதியாகவும், தனிநபர் பயன்பாட்டிலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர அதன் முன் பகுதியில் கூடைபோன்ற அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவர வருகின்ற ஜூலை மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








