இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

எம்ஃப்ளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசரையும், விபரங்களையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் காணலாம்.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

பெங்களூரை சேர்ந்த எம்ஃப்ளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதலாவது எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. எம்ஃப்ளக்ஸ் ஒன் என்ற பெயரிலான இந்த புதிய மாடல்தான் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலாக பெருமை பெற்றது.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

இந்த சூழலில், இரண்டாவது மாடலின் டீசர் மற்றும் முக்கிய விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பைக்குகள் எம்ஃப்ளக்ஸ் Two மற்றும் Two+ ஆகிய இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்கைவிட இந்த புதிய பைக் மாடல்கள் விலை குறைவாக வர இருக்கின்றன.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

எம்ஃப்ளக்ஸ் Two எலெக்ட்ரிக் பைக் இருக்கும் பேட்டரி மற்றும் திறன் வாய்ந்த மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 160 கிமீ வேகம் வரை செல்லும் திறனை வழங்கும். அதேபோன்று, முழுமையாக சார்ஜில் 160 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த பைக் 0 - 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

எம்ஃப்ளக்ஸ் Two+எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக 180 கிமீ வேகம் வரை செல்லும். முழு சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த பைக் 0 - 100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டிவிடும். இது கூடுதல் திறன் வாய்ந்த மாடலாக இருக்கும்.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

புதிய எம்ஃப்ளக்ஸ் Two எலெக்ட்ரிக் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், இண்டிகேட்டர்கள், டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இடம்பெற்றிருக்கும். எம்ஃப்ளக்ஸ் ஒன் சூப்பர் பைக்கின் டிசைன் அம்சங்கள் இந்த இரண்டு மாடல்களிலும் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

எம்ஃப்ளக்ஸ் ஒன் போன்றே இந்த இரண்டு புதிய மாடல்களிலும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், சிறிய மாற்றங்களுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும்.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

புதிய எம்ஃப்ளக்ஸ் Two மற்றும் Two+ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் பைக்குகளும் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் வேரியண்ட்டுகளுக்கு இணையானதாக கருதப்படுகிறது.

இரண்டு புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளின் டீசர் வெளியீடு!

எம்ஃப்ளக்ஸ் ஒன் பைக்கைவிட எம்ஃப்ளக்ஸ் Two மற்றும் Two+மாடல்கள் விலை குறைவாக நிர்ணயிக்கப்படும். ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு இடையிலான விலையில் இந்த இரண்டு மாடல்களும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இரண்டு புதிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2019, 10:26 [IST]
English summary
Emflux has revealed teasers of the Two and the Two+ Electric Motorcycles on social media recently. The Indian electric vehicle startup had dropped teasers of the motorcycle last year with the name "TWO #FUTUREFIGHTER". However, this time around, the image reveals power figures and the travel range of the two variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+