இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இத்தாலியை சேர்ந்த எனர்ஜிக்கா நிறுவனம் இந்தியாவில் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

ஐரோப்பா மட்டுமின்றி, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளில் எனர்ஜிக்கா நிறுவனம் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இதுகுறித்து முன்னணி வர்த்தக இதழ் ஒன்றிற்கு எனர்ஜிகா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்,"தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஆசிய சந்தையிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் எமது எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை கொண்டு செல்வதற்கான திட்டங்களை வைத்திருக்கிறோம். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் இந்திய உள்ளிட்ட ஆசிய நாடுகளில் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் விற்பனையை துவங்குவதற்கு முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

எனர்ஜிக்கா நிறுவனம் தற்போது எவா ரிபெல் ( Eva Ribelle), இகோ (Ego) மற்றும் எவா எஸ்ஸெஸி9 (Eva EsseEsse9) ஆகிய மூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை விற்பனை செய்துள்ளது. இதில், எவா ரிபெல் பைக் ரோட்ஸ்டெர் வகையிலும், இகோ பைக் முழுமையான ஃபேரிங் பேனல்களுடன் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் இருக்கிறது. எஸ்ஸெஸி9 பைக் பாரம்பரிய டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிரது.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த மாடல்கள் திறனை பொறுத்து தலா இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எவா ரிபெல் மட்டும் ஒரே வேரியண்ட்டில் சந்தையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இவை அனைத்துமே பிரிமீயம் வகை எலெக்ட்ரிக் பைக் மாடல்களாக இருக்கின்றன.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

எனர்ஜிக்கா இகோ ப்ளஸ் மற்றும் எவா ரிபெல் ஆகிய பைக் மாடல்களில் இருக்கும் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 145 எச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இகோ பைக் மணிக்கு 240 கிமீ வேகம் வரையிலும், எவா ரிபெல் மற்றும் எவா எஸ்ஸெஸ்ஸி0 ஆகிய பைக்குகள் மணிக்கு 200 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறன் வாய்ந்ததாக உள்ளன.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

அனைத்து பைக்குகளிலும் அர்பன், ஈக்கோ, ரெயின் மற்றும் ஸ்போர்ட் என நான்குவிதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் அசிஸ்ட் வசதியும் இந்த பைக்குகளில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

எனர்ஜிக்கா எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளில் 43 மிமீ மர்சோச்சி முன்புற ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் ரேடியல் காலிபர்களுடன் கூடிய 330 மிமீ டபுள் ஃப்ளோட்டிங் டிஸ்க்குகளுடன் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர்கள் மற்றும் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

இந்தியர்களின் கைகளுக்கு சவால் கொடுக்க வரும் இத்தாலி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள்!

இந்த எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள் டிசைன், செயல்திறன், தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இந்த சூப்பர் பைக்குகள் நிச்சயம் குறிப்பிடத்தக்க சந்தைப் போட்டியை உருவாக்கும்.

Source: Moneycontrol

Most Read Articles
English summary
According to report, Ialian electric two-wheeler manufacturer Energica is planning to enter Indian market end of next year or early 2021.
Story first published: Saturday, December 21, 2019, 17:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X