எவோலெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

எவோலெட் நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், ஒரு எலெக்ட்ரிக் க்வாட் ரக பைக் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அத்துடன், எலெக்ட்ரிக் பைக் மாடலையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. அனைத்து மாடல்கள் பற்றிய விரிவான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எவோலெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹரியானா நிறுவனம்

ரிசாலா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் எவோலெட் நிறுவனம் ஹரியானாவில் தலைமையிடத்தையும், உற்பத்தி ஆலையையும் கொண்டு செயல்பட இருக்கிறது. ஏத்தர், ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ரகத்தில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கி உள்ளது.

ஸ்கூட்டர் மாடல்கள்

எவோலெட் போலோ, போலோ போனி, டெர்பி ஆகிய மூன்று மாடல்களில் இந்த ஸ்கூட்டர்கள் வந்துள்ளன. இந்த மூன்று ஸ்கூட்டர்களுமே EZ மற்றும் க்ளாசிக் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். EZ வேரியண்ட்டானது விஆர்எல்ஏ பேட்டரியுடனும், க்ளாசிக் வேரியண்ட்டானது லித்தியம் அயான் பேட்டரியுடன் கிடைக்கிறது.

எவோலெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முக்கிய அம்சங்கள்

போலோ, போலோ போனி ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறிய வித்தியாசங்களுடன் ஒரே மாதிரியான பாடி ஸ்டைலை கொண்டுள்ளன. டெர்பி ஸ்கூட்டரானது மோட்டோ ஸ்கூட்டர் போன்ற பாடி ஸ்டைல பெற்றிருக்கிறது. எல்இடி ஹெட்லைட், பகல்நேர விளக்குகளுடன் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி தேர்வுகள்

போலோ, போலோ போனி மற்றும் டெர்பி ஸ்கூட்டர்களின் இஇசட் வேரியண்ட்டில் 48V/24Ah பேட்டரியும், க்ளாசிக் வேரியண்ட்டில் 48/24Ah லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, குறைந்த வேக ஸ்கூட்டர் மாடல்களாக வந்துள்ளன.

சார்ஜ் ஏற்றும் நேரம்

இந்த ஸ்கூட்டர்களில் 250 வாய் பிஎல்டிசி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விஆர்எல்ஏ மற்றும் லித்தியம் அயான் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணிநேரம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகளுக்கு 3 ஆண்டுகள் அள்லது 18 மாதங்கள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது.

லைசென்ஸ் தேவையில்லை

இந்த ஸ்கூட்டர்களில் முன்புறத்திலும், பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள், அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. எனவே, இந்த மூன்று ஸ்கூட்டர்களையும் ஓட்டுவதற்கு பதிவும், ஓட்டுனர் உரிமமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவோலெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஸ்கூட்டர்களின் விலை விபரம்

போலோ போனி இஇசட் ஸ்கூட்டர்: ரூ.34,499

போலோ போனி க்ளாசிக்: ரூ.49,499

போலோ இஇசட்: ரூ.44,499

போலோ க்ளாசிக்: ரூ.54,499

டெர்பி இஇசட்: ரூ.46,499

டெர்பி க்ளாசிக்: ரூ59,999

வாரியர் க்வாட் பைக்

இந்த மூன்று ஸ்கூட்டர்களையும் தவிர்த்து, வாரியர் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் க்வாட் ரக பைக் மாடலையும் எவோலெட் விற்னைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நான்கு சக்கர க்வாட் பைக் மாடலானது மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும். ஆனால், 20 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு பயன்பாடு

ஒருமுறை பேட்டரியை சார்ஜ் நிரப்பினால் அதிகபட்சமாக 50 கிமீ தூரம் வரை செல்லும். ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த புதிய எலெக்ட்ரிக் க்வாட் பைக்கிற்கு ரூ.1.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவோலெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

எலெக்ட்ரிக் பைக் மாடல்கள்

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் க்வாட் பைக் தவிர்த்து ஹாக் என்ற அதிவேக எலெக்ட்ரிக் பைக்கையும், ஃபால்கன் என்ற எலெக்ட்ரிக் பைக் மாடலையும் எவோலெட் நிறுவனம் இன்று பொது பார்வைக்கு கொண்டு வந்தது. ஹாக் எலெக்ட்ரிக் பைக்கில் எல்இடி விளக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ஹாக் சிறப்பம்சங்கள்

ஹாக் எலெக்ட்ரிக் பைக்கில் 3,500 வாட்ஸ் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் பிடிக்கும்.

எவோலெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ராப்டர் ஸ்கூட்டர்

மேற்கண்ட மாடல்களை தவிர்த்து, ராப்டர் என்ற எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரையும் எவோலெட் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் இந்த மூன்று மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக எவோலெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2019, 17:52 [IST]
English summary
Haryana based electric vehicle maker, Evolet has launched 3 new electric scooter models and showcased multiple all-electric offerings in India.
மேலும்... #எவோலெட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+