அவல நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு டூ வீலர்கள் விற்பனை... முழுமையான தகவல்!
ஆட்டோமொபைல் டீலர்கள் அசோசியேஷன் கூட்டமைப்பு, வாகனங்களின் பதிவு செய்தது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதுவரை கண்டிராத விற்பனை வீழ்ச்சியை இந்திய வாகனச் சந்தை தற்போது சந்தித்து வருகின்றது. இந்நிலை, நடப்பு 2019ம் ஆண்டு தொடங்கிய முதலிலிருந்தே நிலவி வருகின்றது.
இந்த மோசமான மந்த நிலை காரணமாக, இந்தியாவில் இயங்கி வரும் பல டீலர்கள் ஷோரூம் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆட்குறைப்பு நடவடிக்கையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், நிதி இழப்பை தவிர்க்க வாகன உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட செயல்களிலும் அவை ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வாகனங்கள் பதிவு செய்தது குறித்த தகவலை ஆட்டோமொபைல் டீலர்கள் அசோசியேஷன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில், இருசக்கர விற்பனை கடந்த காலத்தைக் காட்டிலும் மிக மோசமான மந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய சூழலில்தான் இருக்கின்றது என்பதை விளக்கும் வகையில் அது உள்ளது.

அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள வாகன பதிவுகுறித்த தகவல் கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போதைய விற்பனை விகிதம் சற்றே முரண்பாடுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது வாகனத் தொழில் அதன் வரலாற்றில் மிகக் கடினமான காலகட்டத்தில் இருப்பதை உணர்த்துகின்றது.

அதேசமயம், ஒரு சில மாநிலங்கள் மட்டும் சற்று மாறான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் சரிவையேச் சந்தித்திருக்கின்றது. அந்தவகையில், மேற்கு வங்கம் (45.58 சதவீதம்), பிஹார் (2.75 சதவீதம்), உத்தர பிரதேசம் (1.47 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் மட்டும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

இதுகுறித்த முழுமையான தகவலை கீழே உள்ள பட்டியலில் காணலாம்...
| வரிசை | மாநிலங்கள் | ஜுலை-19 | ஜுலைl-18 | வருடம் 5 |
| 1 | உத்தர பிரதேசம் | 2,61,976 | 2,58,172 | 1.47 |
| 2 | தமிழ்நாடு | 1,49,291 | 1,61,586 | -7.61 |
| 3 | மஹாராஷ்டிரா | 1,20,900 | 1,43,148 | -15.54 |
| 4 | மேற்கு வங்கம் | 1,02,071 | 70,115 | 45.58 |
| 5 | கர்நாடகம் | 46,491 | 1,05,656 | -8.67 |
| 6 | குஜராத் | 90,209 | 1,06,139 | -15.01 |
| 7 | பிஹார் | 88,193 | 85,831 | 2.75 |
| 8 | ராஜஸ்தான் | 78,594 | 89,331 | -12.02 |
| 9 | ஒடிசா | 54,678 | 60,697 | -9.92 |
| 10 | கேரளா | 54,658 | NA | NA |
| 11 | ஹரியானா | 49,535 | 50,206 | -1.34 |
| 12 | சத்தீஸ்கர் | 44,654 | 38,452 | 16.13 |
| 13 | பஞ்சாப் | 39,928 | 57,510 | -30.57 |
| 14 | ஜார்கண்ட் | 36,903 | 42,920 | -14.02 |
| 15 | டெல்லி | 35,005 | 42,569 | -17.77 |
| 16 | அசாம் | 28,426 | 28,271 | 0.55 |
| 17 | உத்தர்காண்ட் | 16,184 | 19,735 | -17.99 |
| 18 | ஜம்மு மற்றும் காஷ்மீர் | 10,505 | 12,196 | -13.87 |
| 19 | ஹிமாசல் பிரதேசம் | 6,249 | 7,478 | -16.43 |
| 20 | பாண்டிச்சேரி | 4,815 | 5,349 | -9.98 |
| 21 | திரிபுரா | 3,659 | 3,221 | 13.60 |
| 22 | கோவா | 2,661 | 3,233 | -17.69 |
| 23 | மணிபூர் | 2,360 | 2,747 | -14.09 |
| 24 | சண்டிகர் | 2,163 | 2,447 | -11.61 |
| 25 | மிசோரம் | 2,133 | 1,637 | 30.30 |
| 26 | மெகாலயா | 1,430 | 1,787 | -19.98 |
| 27 | அருணாசல பிரேதசம் | 1,415 | 1,029 | 37.51 |
| 28 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | 615 | 539 | 3.71 |
| 29 | தமான் மற்றும் தியு | 494 | 403 | 22.58 |
| 30 | நாகலாந்து | 483 | 692 | -30.20 |
| 31 | சிக்கிம் | 364 | 232 | 56.90 |

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் இந்திய வாகன சந்தை மிகப் பெரிய கஷ்ட காலத்தில் சிக்கியிருப்பது மிக தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்த சிக்கலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமானதாக ஜிஎஸ்டி, புதிய மாசு உமிழ்வு விதி, எரிபொருள் விலையுயர்வு, வாகன பதிவு விலையுயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.

அதேசமயம், மின் வாகன ஊக்குவிப்பிற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியும் இதற்கு ஓர் முக்கிய காரணமாக இருப்பதாக வாகனத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் வாகனங்களில் வெளியேறும் புகை பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுகின்றது. அத்துடன், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.

இவைகளுக்கு தீர்வு காணும் விதமாகவே, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலை, பதிவு கட்டணம் போன்றவற்றை உயர்த்தி வருகின்றது.
இதனால், மக்கள் எரிபொருள் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதன் பின்விளைவாக இந்திய வாகனத்துறை அதலபாதாளத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில், தப்பிக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசிடம், ஜிஎஸ்டி வரி குறைப்பு, எரிபொருள் வாகனங்களுக்கு சலுகை வழங்குதல் போற்றவற்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








