வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

வெளிநாட்டு வாலிபர் ஒருவரை இந்திய போலீசார் சுற்றி வளைத்தனர். இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தையும், பெருமிதத்தையும் ஒரு சேர ஏற்படுத்தலாம்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் கார்ல் ராக். இவர் மோட்டார் சைக்கிள்கள் மீது, குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்கள் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நீண்ட தூர 'டிரிப்' அடிப்பதை கார்ல் ராக் வழக்கமாக கொண்டுள்ளார்.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இந்த சூழலில் கார்ல் ராக் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் புனே நோக்கி, ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அப்போது மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே (Mumbai-Pune Expressway) சாலையில் கார்ல் ராக் நுழைந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். ஏனெனில், மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில், இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வது என்பது சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது. இங்கு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானதும் கூட.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில், கார், லாரி மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் வரும். இந்த சாலையில், மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அப்போது இரு சக்கர வாகனங்கள் உள்ளே வந்தால், விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. குறிப்பாக அதிவேகத்தில் செல்லும் கார், லாரி மற்றும் பஸ் போன்ற வாகனங்களில் இருந்து வீசும் காற்று, இரு சக்கர வாகன ஓட்டிகளை நிலை குலைய செய்யலாம்.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இதன் காரணமாகதான் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில், இரு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விஷயம் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கே அவ்வளவு அதிகம் தெரியாது.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

நிலைமை இப்படி இருக்கையில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவரான கார்ல் ராக்கிற்கும், மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில் பயணிக்க இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விஷயம் தெரியவில்லை.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

எனவே மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில் அவர் தவறுதலாக நுழைந்து விட்டார். அப்போதுதான் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பொதுவாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், இந்திய போலீசார் பெரும்பாலானோர் வசூல் வேட்டை நடத்துவது என்பதே வழக்கமான ஒன்றாக உள்ளது.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அதிலும் குறிப்பாக மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில், விதிகளை மீறினால், அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக, 300 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரை லஞ்சமாக கறந்து விடுகின்றனர் என கூறப்படுகிறது. ஆனால் கார்ல் ராக்கிற்கு நடந்த கதையே வேறு.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

கார்ல் ராக்கிடம் போலீசார் எப்படி நடந்து கொண்டனர்? என்பது தெரிந்தால், இந்திய வாகன ஓட்டிகள் பலரது புருவங்கள் உயரக்கூடும். முதலில் எந்த நாடு? பாஸ்போர்ட் எங்கே? என்பது போன்ற வழக்கமான விசாரணைகளை, கார்ல் ராக்கிடம் போலீசார் மேற்கொண்டனர்.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

பின்னர் அவர் தவறுதலாக அங்கு வந்து விட்டதை உணர்ந்து கொண்டனர். இதன்பின் கார்ல் ராக்கிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்ட போலீசார், 'நீங்கள் எங்கள் விருந்தாளி' என தெரிவித்தனர். தெரியாமல் செய்த சிறிய தவறுக்காக, எங்களது விருந்தாளிக்கு அபராதம் விதிக்க முடியாது எனவும் அவர்கள் கூறினர்.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இதன்பின் ஒரு நண்பனை போன்று, கார்ல் ராக்கிற்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர். அத்துடன் கார்ல் ராக்கிற்கு சரியான மாற்று பாதையையும் எடுத்துரைத்த பின், அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர். இதன்பின் கார்ல் ராக் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

முன்னதாக கார்ல் ராக்கின் நண்பரான கௌரவ் என்பவரும், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். இவர் கார்ல் ராக்கை பின் தொடர்ந்து, தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் இந்தியாவை சேர்ந்தவர் என தெரிகிறது.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

ஆனால் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விஷயத்தை, அவரும் கூட அறிந்திருக்கவில்லை. அவரும் தெரியாமல் அங்கு வந்து விட்டார். ஆனால் அவரிடமும் போலீசார் வசூல் வேட்டை நடத்தவில்லை.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அதற்கு மாறாக அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர். கார்ல் ராக் போல், கௌரவிற்கு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை!! இந்திய போலீசார் தன்னிடம் நடந்து கொண்ட விதம், கார்ல் ராக்கை வெகுவாக மகிழ்ச்சியடைய செய்தது.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இந்திய போலீசார் சிலர் லஞ்சம் வாங்கும் விஷயத்தை கார்ல் ராக்கும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார். அப்படி இருக்கையில், வெளிநாட்டவரான தன்னிடம் இந்திய போலீசார் மிகவும் அன்பாக நடந்து கொண்டதால், கார்ல் ராக் உச்சி குளிர்ந்து போனார்.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

உடனே நடந்த சம்பவங்களை எல்லாம் வீடியோவாக வெளியிட்டார். முன்னதாக கார்ல் ராக்கை போலீசார் நிறுத்தி விசாரித்தபோது நடந்த சம்பவங்கள் எல்லாம், கார்ல் ராக்கின் ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகியிருந்தன.

வெளிநாட்டு வாலிபரை சுற்றி வளைத்த இந்திய போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

அந்த காட்சிகளையும் தனது வீடியோவில் அவர் இணைத்து கொண்டார். தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கார்ல் ராக் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில், கார்கள், டாக்ஸிகள், இலகுவான மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அத்துடன் மூன்று சக்கர வாகனங்களுக்கும் அங்கு அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Foreign Biker On Royal Enfield Himalayan Gets Busted By Indian Cops: Video Goes Viral. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X