டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

இரு சக்கர வாகன டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் வகையிலான எச்சரிக்கை ஒன்றை போலீஸ் கமிஷனர் விடுத்துள்ளார்.

டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

சாலை விபத்து என்ற கொடிய அரக்கனிடம் சிக்கி உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டில், சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.48 லட்சமாக இருந்தது. இது கடந்த 2018ம் ஆண்டில் 1.49 லட்சமாக அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு ஒருவர் ஹெல்மெட் அணிவதே பெரிய விஷயமாக உள்ளது.

டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கியமான காரணம். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க மத்திய, மாநில அரசுகளின் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

அத்துடன் புதிய இரு சக்கர வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என்ற விதியும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும், வாகன உற்பத்தி நிறுவனங்கள், ஆர்டிஓக்கள், டீலர்கள் கூட்டாக இணைந்து இந்த விதி மீறலை அரங்கேற்றி வருவதாகவும், சமீபத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

ஓரியண்டல் மனித உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்தான், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச்சில், கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த பொது நல வழக்கை தொடர்ந்திருந்தனர். அதன்பின்புதான் இப்படி ஒரு விதி இருப்பதே பலருக்கும் தெரியவந்தது.

டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்
டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

அப்போது அவரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ''புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும்போது ஹெல்மெட் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியை ராஜ்கோட் நகரில் உள்ள பெரும்பாலான டீலர்கள் பின்பற்றுவது இல்லை'' என கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை போலீஸ் கமிஷனர் மனோஜ் அகர்வால் பெற்று கொண்டார்.

டீலர்களின் மோசடிகளுக்கு முடிவு கட்டும் போலீஸ் கமிஷனர்... என்னவென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள்

அத்துடன் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்காத டீலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். போலீஸ் கமிஷனர் மனோஜ் அகர்வாலின் இந்த அதிரடி இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமிஷனர் உறுதியளித்தபடி டூவீலர் டீலர்களின் அனைத்து மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

Source: TOI

Most Read Articles
English summary
Free Helmets For New Two-wheeler Buyers: Police Commissioner Warns Dealers. Read in Tamil
Story first published: Friday, March 29, 2019, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X