கெமோபய் அஸ்ட்ரிட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

கெமோபய் அஸ்ட்ரிட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை விபரம் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒபாய் எலெக்ட்ரிக் மற்றும் கோரீன் இ மொபிலிட்டி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து கெமோபய் என்ற பிராண்டில் புதிய மின்சார ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. கெமோபய் பிராண்டில் உருவாக்கப்பட்டுள்ள முதல் ஸ்கூட்டருக்கு அஸ்ட்ரிட் லைட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கெமோபய் அஸ்ட்ரிட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த புதிய ஸ்கூட்டருக்கு ரூ.79,999 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள கெமோபய் பிராண்டின் ஷோரூம்களில் இந்த புதிய அஸ்ட்ரிட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

புதிய கெமோபய் அஸ்ட்ரிட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.7 kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரியும், 2,400 வாட் எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி மாட்டும் வசதியையும் பெற்றுள்ளது.

அஸ்ட்ரிட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 முதல்ல 90 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 65 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

இந்த ஸ்கூட்ரில் சிட்டி, ஸ்போர்ட் மற்றும் எக்கானாமி என மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. இதில், கூடுதலாக இரண்டாவது பேட்டரியை பொருத்தும் வாய்ப்பும் இருக்கிறது. இரண்டாவது பேட்டரியை பொருத்தினால், 150 முதல் 180 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். 18 டிகிரி செங்குத்தான சாலைகளிலும் எளிதாக ஏறும் திறன் பெற்றுள்ளது.

எல்இடி விளக்குகள், முழுமையான எல்இடி வண்ணத் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கீ லெஸ் ஸ்டார்ட் வசதி, யுஎஸ்பி போர்ட் என பிரிமீயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

சைடு ஸ்டான்டு சென்சார், ஆன்ட்டி தெஃப்ட் வசதி, எலெக்ட்ரானிக் அசிஸ்ட் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரி 8.5 கிலோ எடை கொண்டது.

புதிய கெமோபய் அஸ்ட்ரிட் லைட் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் நியான், டீப் இண்டிகோ, ஃபியரி ரெட், பர்ன்ட் சார்கோல் மற்றும் ஃபயர்பால் ஆரஞ்ச் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

கெமோபய் அஸ்ட்ரிட் ஸ்கூட்டர் இந்தியாவில் மட்டுமல்லாது, நேபாளத்திலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் முதல் இந்தியா மற்றும் நேபாளத்தில் இந்த ஸ்கூட்டரின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
Gemopai Electric has launched their Astrid Lite electric scooter in India at a price tag of Rs 79,999.
Story first published: Tuesday, September 10, 2019, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X