கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

கோவையை சேர்ந்த நிறுவனம் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளியிட்டு இருக்கிறது. விரைவில் சந்தைக்கு வர இருக்கும் இந்த க்ராஸ்ஓவர் ரக பைக்கின் சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

கோவையை சேர்ந்த குகு எனர்ஜி என்ற நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்ததின் முதல் எலெக்ட்ரிக் இருச்சக்கர வாகனத்தின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

குகு ஆர்-எஸ்யூவி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய இருசக்கர வாகனம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டின் டிசைன் அம்சங்களையும் கலந்து கட்டிய க்ராஸ்ஓவர் ரக இருசக்கர வாகனமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

மேலும், ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரின் டிசைன் தாத்பரியங்களை மனதில் வைத்து இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை குகு நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த பைக் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

ஸ்டான்டர்டு வேரியண்ட் பைக்கானது ரூ.1.25 லட்சத்திலும், அதிக தூரம் பயணிக்கும் கூடுதல் திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்ட மற்றொரு வேரியண்ட் ரூ.3 லட்சம் விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது. அட்வென்ச்சர் ரக பைக் போல காட்சி தரும் இந்த புதிய மின்சார இருசக்கர வாகனம் ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பெரிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிவேகத்தில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி, வேகத்தில் தடை ஏற்படாது என்பதுடன் பேட்டரி திறன் விரயமாவதை தவிர்க்கவும் உதவும்.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்களஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. நேவிகேஷன் வசதி, நிகழ்நேர போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்கள், பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவு, ஸ்பீடோமீட்டர், வண்டி ஓடிய தூரம், ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இதன்மூலமாக பெற முடியும்.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

குகு எனர்ஜி நிறுவனத்தின் பிரத்யேக ஸ்மார்ட்போன் செயலியை இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் இணைத்துக் கொண்டு பல்வேறு தகவல்களை எளிதாக பெற முடியும். மேலும், அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையம் குறித்த தகவலையும் பெற முடியும்.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

குகு ஆர்-எஸ்யூவியின் பேட்டரியை வெறும் 45 நிமிடங்களில் குயிக் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்ற முடியும். இதன்மூலமாக, 160 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், இரட்டை வண்ண இருக்கை அமைப்பு உள்ளிட்டவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள்.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 6 kWh திறன் வாய்ந்த லிக்யூடு கூல்டு பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் மின் மோட்டார் அதிகபட்சமாக 65 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. வெறும் 6 வினாடிகளில் 0 -97 கிமீ வேகத்தை எட்டிவிடும் ஆற்றல் வாய்ந்த மாடலாக வருகிறது.

கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை குகு எனர்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்பதிவையும் இணையதளம் மூலமாக வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும். எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டின் எஸ்யூவி மாடலாக இதனை கூறலாம்.

Most Read Articles
English summary
Coimbatore based Gugu Energy has revealed of its first electric bike, named as R-SUV.
Story first published: Wednesday, April 17, 2019, 12:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X