ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை இலவசமாக வழங்கும் ஹார்லி டேவிட்சன்... எதற்கு தெரியுமா...?
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இலசவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன், இந்திய இளைஞர்களைக் கவரும் வகையில் கிளாசிக், க்ரூஸர், ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு ரகத்திலான மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் டீலர்கள், 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரைடிங் கியர்களை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஹார்லி டேவிட்சனின் இந்த சலுகையானது, இந்தியாவில் இரு முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது. அதன்படி, புனே மற்றும் கோலாபூர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் டீலர்கள் மட்டுமே வழங்க இருக்கின்றனர். அதேசமயம், இந்த சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த இலவச சலுகை வருகின்ற ஜூலை மாதம் 10ம் தேதி நிறைவடைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், ஹார்லி டேவிட்சனின் குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஹார்லி டேவிட்சன் அயர்ன் 883, ஹார்லி டேவிட்சன் 48, ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம், ஹார்லி டேவிட்சன் 48 ஸ்பெஷல் மற்றும் ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் உள்ளிட்ட மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள ரைடிங் கியர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

அந்தவகையில், ரைடிங் கியர்களாக ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், க்ளோவ்ஸ், க்னி குவார்ட் மற்றும் ரைடிங் பூட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இவை, ரூ. 45 ஆயிரம் விலை மதிப்பு கொண்டது என கூறப்படுகின்றது. ஆனால், இவையனைத்தும் மேற்கூறிய மாடல்களையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது. அதுவும், புனே மற்றும் கோலாபூர் ஆகிய இரு நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

ஹார்லி டேவிட்சனின் அயர்ன் 883 மாடல் ரூ. 9.23 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. இதில், 883 சிசி ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 70 என்எம் டார்க்கை வழங்கும் திறன் கொண்டது. அதேபோன்று, ஹார்லி டேவிட்சன் 48 மற்றும் ஹார்லி டேவிட்சன் 48 ஸ்பெஷல் ஆகிய இரு பைக்குகளும் ரூ. 10.58 லட்சத்திலிருந்து, ரூ. 11.52 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த இரண்டு பைக்குகளுமே உருவத்தால் மாறுபட்டிருந்தாலும், எஞ்ஜின் திறனில் ஒரு மாதிரியானதாக இருக்கின்றன. அந்தவகையில், இந்த இரு பைக்கிலும் 1,202 சிசி திறன் கொண்ட ஏர் கூல்ட் இவோல்யூஷன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, உச்சகட்டமாக 98 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது. இதையடுத்துள்ள, ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மாடல் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 11.27 லட்சம் வரையிலான தொகையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

கடைசியாக, அந்நிறுவனத்தின் இருசக்கர வாகன வரிசையில் டாப் மாடலாக இருக்கும் ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் ரூ. 11.08-11.62 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம், சமீபகாலமாக அது எதிர்பார்த்த விற்பனையைப் பெறவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், அதன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள, அது மிகவும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றது. ஆனால், இந்தியாவைத் தவிர மற்ற உலகச் சந்தையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தகுதந்தது.

இதுபோன்று, காரணங்களால் ஹார்லி டேவிட்சன் நிறுவன் அதன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றது. அந்தவகையில்தான், இந்த புதிய இலவச யுக்தியை அந்த நிறுவனம் கையாண்டுள்ளது. மேலும், இதுவரை வழங்க அளிக்காத சலுகையில் புதிய பைக்குகளை இந்தியச் சந்தையில் அந்த நிறுவனம் விரைவில் களமிறக்க இருக்கின்றது.

அந்தவகையில், கியான்ஜியாங் மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடன் இந்தியச் சந்தைக்கு புதிய மாடல் பைக்கை அந்த நிறுவனம் கொண்டு வர இருக்கின்றது. ஹார்லி டேவிட்சனின் இந்த புதிய பைக் 338சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பெற்றிருக்கும் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இந்த எஞ்ஜின் வாட்டர் கூல்ட், பேரல்லல் ட்வின் ஸ்கிராம்ப்ளர் தரத்தில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த பிரத்யேக மாடலைத்தான் ஹார்லி நிறுவனம் வருகின்ற 2020ம் ஆண்டில் சைனாவிலும், அதற்கு முன்னதாக 2021ம் ஆண்டு இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன், கூடுதலாக ஆஃப் ரோடு ரகத்திலான க்ரூஸர் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்கையும் அந்த இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த புதிய தயாரிப்புகள் இந்தியச் சந்தையில், ஹார்லி டேவிட்சனுக்கு ஓர் புதிய இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








