அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

பிரபல ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அதீத கவர்ச்சி மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய பைக் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பைக்கின் மாதிரி புகைப்படம் மற்றும் தகவலை கீழே காணலாம்.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

இருசக்கர வாகன தயாரிப்பில் உலகளவில் புகழ்வாய்ந்த மாடலாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இருக்கின்றது. இந்நிறுவனம், முக்கியமாக பாரம்பரிய தோற்றம் கொண்ட பைக்குகளை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கின்றது.

அதேசமயம், இந்நிறுவனம் உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

ஹார்லி டேவிட்சன் பெரும்பாலும் இளைஞர்களைக் கவர்கின்ற வகையிலான பைக்குகளுக்கே அதீத முக்கியத்துவத்தைச் செலுத்தி வருகின்றது. அந்தவகையில், பாரம்பரியம் மற்றும் துடிப்பான ஸ்டைலிலான இரு சக்கர வாகனங்களை அது தயாரித்து வருகின்றது.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

இந்நிலையில், புத்தம் புதிய மற்றும் அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட ஓர் பைக்பை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணியில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக பென்னட்ஸ் என்னும் ஆங்கில செய்தி தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த பைக்குறித்த மாதிரி புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த புதிய பைக், அதன் 1994 விஆர்1000 ரேசர் பைக்கை தழுவி உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் மாதிரி புகைப்படமும் உறுதி செய்கின்றது.

ஆகையால், இணையத்தில் கசிந்து வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை ஒத்தவாறே புதிய ஹார்லி டேவிட்சன் பைக் தயாராக இருக்கின்றது.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

அதேசமயம், புகைப்படத்தில் இருப்பதைக் காட்டிலும் தயாரிப்பின்போது ஒரு சில மாற்றங்களை அந்த பைக் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய விஆர்1000 பைக்கை கூடுதல் கவர்ச்சியாக்கும் நோக்கிலேயே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

ஹார்லி நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில், புதிதாக தயாராகி வரும் பைக்கினை இதுவரை கண்டிராத அளவில் மிகுந்த அழகான மாடலாக உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. அதை உறுதி செய்கின்ற வகையிலேயே அந்நிறுவனத்தின் நடவடிக்கையும் காணப்படுகின்றது.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

தொடர்ந்து, புதிய ஆர்வி1000 மாடலில் புதிய டிஓஎச்சி, லிக்யூடு கூல்ட் வி-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹார்லி டேவிட்சன் இதற்கு முன்பாக கடந்த இதேபோன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தற்போது தயாராகி வரும் புதிய கவர்ச்சியான மாடலை போன்றே, ஓர் தரமான மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தது. அதைதான் தற்போது ஹார்லி வெளியிட இருப்பதாக தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

ஆனால், ஹார்லி நிறுவனம் சார்பில் அதுகுறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அதேசமயம், ஸ்போர்ட்-நேக்கட் மாடலிலான ஸ்ட்ரீட் பைட்டர் மற்றும் அட்வென்சர் மாடலிலான பேன் அமெரிக்கா என்ற இரு மாடல்களையும் ஹார்லி நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு!

இவ்விறு மாடல்களின் மாதிரி வாகனங்களையும் கடந்த 2018ம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும், அவற்றின் உற்பத்தி மட்டும் நீண்ட நாட்களாக தடைபட்டவாறு உள்ளது.

ஆகையால், இந்த புதிய மாடலின் உற்பத்தியும் சில காலங்கள் இழுத்தடிக்கப்படலாம் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2019, 14:37 [IST]
English summary
Harley Davidson Faired Motorcycle Under Development. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+