10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பத்து நாட்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்கை இலவசமாக இயக்கலாம் என அறிவித்துள்ளது.

10 நாளுக்கு ஹார்லி பைக்கை இலவசமாக ஓட்டிச்செல்லலாம்: ஹார்லியின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கிளாசிக் மாடல் பைக்குகளைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது. 1904ம் ஆண்டு வில்லியம் எஸ் ஹார்லி மற்றும் ஆர்தர் டேவிட்சன் என்பவர்களால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இந்நிறுவனம் தொடங்கி சுமார் 115 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை இந்த நிறுவனத்தின் அனைத்து ரக பைக்குகளுக்கும், உலக நாடுகள் முழுவதிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

பைக்கின் தரம், ஸ்டைல் மற்றும் திறன் உள்ளிட்டவையே இந்த பைக் தீராத மோகம் கொள்ள காரணமாக உள்ளது. இதனாலேயே இந்த பைக் பலரது கவனத்தை கவர்ந்து வருகிறது. இருப்பினும் இந்த பைக் ஆரம்பத்தில் பிரபலமடையக் காரணம், இது ரேஸ் செய்யும் திறன் தான். அதன்படி, இந்த பைக் முதன்முதலாக 1905ம் ஆண்டு ரேஸில் கலந்துக்கொண்டது. அப்போது, அது கலந்துக்கொண்ட முதல் போட்டியிலேயே பெருமளவில் வெற்றியைப் பெற்று சாதனை செய்தது. இவ்வாறு தான் இந்த நிறுவனத்தின் வரலாறு பரவ ஆரம்பித்து.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் ஒவ்வொரு நாடாக தனது கால் தடத்தை பதிக்க ஆரம்பித்தது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஹார்லி டேவிட்சன் பைக்குள் இந்தியா இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

பாரம்பரியமிக்க லுக், பிக்அப் என இதன் கவர்ச்சிகர தோற்றம் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்தியர்களின் மனதைக் கொள்ளைக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து, தற்போது இந்த பைக்குக்கு போட்டியாக பல இருசக்கர வாகனங்கள் களம் இறக்கப்பட்டன. ஆனால், அவை வந்த வேகத்தில் ஹார்லியிடம் போட்டிப்போட முடியாமல் மூச்சுத் திணறி கரை ஒதுங்கிவிட்டன. இவ்வாறு ஹார்லி சென்ற இடமெல்லாம் அதன் புகழை பரப்ப தவறியதில்லை.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்கு நிறுவனம் இந்தியாவில் தனது கால் தடத்தை பதித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் 10ம் ஆண்டு நிறைவு தினத்தை சிறப்பிக்கும் விதமாக அந்நிறுவனம் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இரண்டு பிரத்யேக மாடல் பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இதுகுறித்து, இந்தியாவிற்கான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இயக்குநர் மேலாளர் சஜீவ் ராகசேகரன் கூறியதாவது, "ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் பலமான அடியை எடுத்து வைத்துள்ளது. பைக் பிரியர்களின் தேர்வாக இருந்து வரும் எங்களின் ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு 10 ஆண்டுகள் என்பது புதிய பாதைக்கான தொடக்கமாக உள்ளது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இந்த தினத்திற்காக எங்களின் விநியோகஸ்தர்கள், எங்களின் தயாரிப்புகளுக்கு நீண்ட காலமாக ஆதரவு செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து, வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் ஹார்லி டேவிட்சன் 1250 அட்வென்சர் டூரிங் மாடல் மற்றும் 975சிசி ஸ்ட்ரீட்பைட்டர் ஆகிய இரண்டு மாடல்களையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இதன்படி, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 1250சிசி ரகத்தில் முதல் அட்வென்சர் டூரிங் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புத்தம் புதிய மாடல் முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன்பின்னரே, உலகின் மற்ற நாடுகளில் இந்த பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

ஹார்லிடேவிட்சன் 975சிசி ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலில் வி-ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. நேக்கட் ஸ்போர்ட்ஸ் டிசைனில் வரும் இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள், பிரத்யேக பெட்ரோல் டேங்க் கிளாடிங், குறைவான அளவு ஃபேரிங்குகள், இரட்டை இருக்கை அமைப்பு, குட்டையான வால் அமைப்பு, கேனிஸ்ட்டருடன் கூடிய புகைப்போக்கி ஆகிய அமைப்புகளுடன் வர இருக்கிறது.

10 நாட்களுக்கு பைக் இலவசம்: ஹார்லிடேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இதைத்தொடர்ந்து, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பத்தாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள தனது 31 டீலர்கள் மூலம், ஹார்லி டேவிட்சன் பைக்கை இலவசமாக இயக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 18-ம் தேதி முதல் பத்து நாளைக்கு ரைடர்கள் மற்றும் ரசிகர்கள் ஹார்லி டேவிட்சனை இலவசமாக இயக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 23, 2019, 15:46 [IST]
English summary
Harley Davidson Special Announce For 10 Year Celebrates In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+