ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தனது முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலான லைவ்வயர் அறிமுகத்தின்போதே, இந்த லிமிடேட் எடிசன் மாடலின் அறிவிப்பையும் ஹார்லி டேவிட்சன் அறிவித்தது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை பார்க்கலாம்.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான மாடல் ஸ்ட்ரீட் 750. இந்த பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது ஹார்லி டேவிட்சன்.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

இந்தியாவில் 10ம் ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், இந்த பைக்கில் விசேஷ பேட்ஜ் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் டேங்க்கில் ஹார்லி டேவிட்சன் பெயருக்கு கீழாக 10ம் ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் விசேஷ பேட்ஜ் உள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

அதேபோன்று, டெயில் லைட் க்ளஸ்ட்டருக்கு மேற்பக்கமாக 10ம் ஆண்டு ஸ்பெஷல் எடிசன் என்பதை குறிக்கும் விசேஷ எழுத்துக்களுடன் பேட்ஜ் கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 300 யூனிட்டுகள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

இந்த பைக்கில் 749சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 என்எம் டார்க் திறனை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இதன் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் ஹார்லி டேவிட்சன் பைக் மாடலாகவும் வந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஆனிவர்சரி எடிசன் மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களுடன் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் இரண்டு பிஸ்டன் காலிபர்களுடன் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடலானது புதிய இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான உணர்வையும், கூடுதல் மதிப்பையும் வழங்கும்.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

இந்த லிமிடேட் எடிசன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு ரூ.5.47 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண ஸ்ட்ரீட் 750 பைக்கை விட ரூ.25,000 கூடுதல் விலையில் வந்துள்ளது. அதேசமயத்தில் ஸ்ட்ரீட் ராட் பைக்கைவிட ரூ.1.1 லட்சம் குறைவான விலையில் இந்த பைக் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 27, 2019, 16:11 [IST]
English summary
American premium motorcycle manufacturer Harley-Davidson completes 10 years in India, and to commemorate the occasion, the company has launched a limited edition version of its Street 750 bike today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+