விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கியிருந்த பிரபலமான இரண்டு மாடல்களை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

இந்தியாவில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், அதன் தயாரிப்புகள் பலவற்றை அந்த நிறுவனம் இங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் ஆகிய இரண்டு மாடல்களையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

அந்த வகையில், இரண்டு மாடல்களிலும் மொத்தம் 58 யூனிட்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மிடில்வெயிட் கொண்ட இந்த இரு மாடல்களிலும் ஏற்பட்ட சில கோளாறுகள் காரணாக அண்மையில் இந்தியாவில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, அனைத்து பிரச்னைகளும் தீர்வு செய்யப்பட்டநிலையில், மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளன.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

ஆரம்பத்தில் இந்த மோட்டார்சைக்கிள்களில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முடியமால் தவித்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அவற்றிற்கு மூடு விழா செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், பிரச்னைக்கான தீர்வு எட்டப்பட்டநிலையில், அவற்றை மீண்டும் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 749சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் அவற்றில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 62 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

இந்த பிரீமியம் ரக க்ரூஸர் மாடல் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளின் விலை ரூ.5.33 லட்சம் என்றும், ஸ்ட்ரீட் ராட் மாடலின் விலை ரூ.6.53 லட்சம் என்ற விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்து பத்து ஆண்டுகள் கடந்திருப்பதை முன்னிட்டு விழாவாகக் கொண்டாடி வருகிறது. மேலும், இதனைச் சிறப்பிக்கும் விதமாக, பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அண்மைக் காலங்களாக அறிவித்து வருகின்றது.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

அந்தவகையில், ஹார்லி டேவிட்சனின் இரண்டு புதிய மாடல்களான 1250 அட்வென்சர் டூரிங் மற்றும் 975சிசி கொண்ட ஸ்ட்ரீட் பைட்டர் ஆகிய இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களையும் வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது.

விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் க்ரூஸர் ரக பைக்...!

மேலும், இந்தியாவில் அதன் 31 டீலர்கள் மூலம், ஹார்லி டேவிட்சனின் எந்தவொரு மோட்டார்சைக்கிளையும் இலவசமாக 10 நாட்கள் இயக்கலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. இந்த சலுகையானது, பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் முறையில் பணி புரியும் வாய்ப்பினை கடந்த வாரத்தில் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2019, 15:09 [IST]
English summary
Harley Davidson Street Makes A Comeback In India. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+