ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார் சைக்கிள் கூட விற்பனையாகவில்லை. அதன் ஸ்ட்ரீட் ராட் பைக்கிற்கும் இதே நிலைதான்.

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மிகவும் விலை உயர்ந்த க்ரூஸர் (Cruiser) ரக மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது. உலகெங்கும் இருப்பதை போல இந்தியாவிலும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனை செய்து வரும் என்ட்ரி-லெவல் மாடல்களில் ஒன்று ஸ்ட்ரீட் 750 (Harley Davidson Street 750). இந்தியாவில் மிக பிரபலமான ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளாக ஸ்ட்ரீட் 750 திகழ்ந்து வருகிறது.

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

இருந்தும் என்ன பயன்? கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மாடல் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. அந்த மாதம் முழுக்க ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தால் ஒரு ஸ்ட்ரீட் 750 மோட்டார் சைக்கிளை கூட இந்தியாவில் விற்பனை செய்ய முடியவில்லை. உண்மைதான். கடந்த பிப்ரவரி மாதத்தில், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார் சைக்கிளின் விற்பனை நிலவரம் பூஜ்ஜியம் என்ற படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு முன்பாக இப்படி ஒரு விபரீதத்தை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் சந்தித்ததில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

ஸ்ட்ரீட் 750 மட்டுமல்லாது, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மற்றொரு முன்னணி மாடலான ஸ்ட்ரீட் ராட் (Harley Davidson Street Rod) மோட்டார் சைக்கிளுக்கும், இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வாடிக்கையாளர் கூட கிடைக்கவில்லை. அதாவது ஸ்ட்ரீட் ராட் பைக்கின் விற்பனை நிலவரமும் கூட பூஜ்ஜியம்தான். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பிரபலமான இரு மாடல்களின் விற்பனையும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருப்பதற்கு, ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650) ஆகிய மோட்டார் சைக்கிள்கள்தான் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் என அழைக்கப்படுகின்றன. இந்திய மார்க்கெட்டில் இன்றைய தேதியில் கிடைக்கும் மிகவும் மலிவான ட்வின் சிலிண்டர் மோட்டார் சைக்கிள்களான இவை, அதே அளவிலான பவர் மற்றும் டார்க்கை கிட்டத்தட்ட பாதி விலையில் வழங்குகின்றன.

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார் சைக்கிளின் விலை சுமார் 5.57 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது விவிட் பிளாக் கலருக்கான விலை. வேறு ஏதாவது சிங்கிள் டோன் கலர் வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10,000 ரூபாயை செலவழிக்க வேண்டும். மறுபக்கம் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிளின் விலை 2.50 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது பேஸ் வேரியண்ட்டிற்கான விலை. ட்யூயல் டோனின் விலை ரூ.2.58 லட்சம். குரோம் ஷேடின் விலை ரூ.2.70 லட்சம்.

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

அதே சமயம் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 குரோம் மோட்டார் சைக்கிளின் விலை வெறும் 2.85 லட்ச ரூபாய் மட்டுமே. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார் சைக்கிளின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கு காரணம் என்னவென்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் மோட்டார் சைக்கிளின் சரிவிற்கும் கூட அதன் அதிகப்படியான விலைதான் காரணமாக பார்க்கப்படுகிறது. ஸ்ட்ரீட் ராட் மோட்டார் சைக்கிளின் விலை 6.55 லட்ச ரூபாய். ட்யூயல் டோன் ஷேடு வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் 6.81 லட்ச ரூபாயை செலவழிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக்குகளை வாங்க இந்தியாவில் ஒரு ஆள் கூட இல்லை... காரணம் ராயல் என்பீல்டு...

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் 750 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 749 சிசி, High Output Revolution X V-ட்வின் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 62 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. மறுபக்கம் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 648 சிசி, ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Harley Davidson Street Rod 750 Sales Down Zero In Feb 2019. Read in Tamil
Story first published: Monday, April 8, 2019, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X