இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தியில் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தியாவை பொறுத்த வரை, வாழ்நாளில் ஒரு ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் பலர். ஆனால் ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள்களின் விலை மிகவும் அதிகம்.

எனவே ஹார்லி டேவிட்சன் பைக்கை சொந்தமாக்க வேண்டும் என்ற பலரது கனவும் நிறைவேறாமலேயே போய் விடுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு வரை பொறுத்து கொள்ளுங்கள். நீங்களும் எளிதாக ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை வாங்கலாம்.

உண்மைதான். ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது மிகவும் விலை மலிவான மோட்டார்சைக்கிள் மாடலை 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த பைக் இந்தியாவை போல் இதர ஆசிய மார்க்கெட்களிலும் அடுத்த ஆண்டு களமிறக்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2019 முதல் காலாண்டு அப்டேட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2 புதிய மோட்டார்சைக்கிள் பிளாட்பார்ம்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதில் முதலாவது 250சிசி-500சிசி செக்மெண்ட் பிளாட்பார்ம். இரண்டாவது மிடில் வெயிட் பிளாட்பார்ம். இதில், 750 சிசி செக்மெண்ட் மோட்டார்சைக்கிள்களை பார்க்க முடியும். தற்போதைய நிலையில் இந்த 2 பிளாட்பார்ம்களிலும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதில், 250சிசி-500சிசி பிளாட்பார்ம் இந்தியா போன்ற மார்க்கெட்களுக்கு என பிரத்யேகமாக தயார் செய்யப்படுகிறது. இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாகும் புதிய பைக் அனேகமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றுடன் ஹார்லி டேவிட்சன் கூட்டணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஹார்லி டேவிட்சனின் புதிய பார்ட்னர் யார்? என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த மோட்டார்சைக்கிளுக்கு மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.

அனேகமாக வெறும் 2.5 லட்ச ரூபாய்க்கு கிடைத்தாலும் கிடைக்காலும் என கூறப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை பொறுத்தவரை இது மலிவான விலையே. ஆனால் விலை தொடர்பான உறுதியான தகவல் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

இந்த சூழலில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது தயாரிப்பை, இத்தாலியில் நடைபெறவுள்ள 2019 எக்மா (EICMA) கண்காட்சியில், குறைந்தபட்சம் கான்செப்ட் வடிவிலாவது காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 எக்மா கண்காட்சி வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








