ரூ.35,000 அபராதம் செலுத்தும் புல்லட் பைக் உரிமையாளர்.. எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

ரூ. 35 ஆயிரத்தை அபராதமாக செலுத்த இருக்கும் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கின் உரிமையாளர். எதற்காக என்ற அதிர்ச்சி தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

கடந்த செப்டம்பர் 1ம் தேதி அமலுக்கு வந்த, புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் அதீத அபராத தொகையே மக்களின் தற்போதைய களோபர நிலைக்கு முக்கிய காரணம்.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

வாகனத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும், ஹாட் டாபிக்காக புதிய உயர்த்தப்பட்ட அபராத விதி தற்போது மாறியிருக்கின்றது.

இந்த விதி, முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையைக் காட்டிலும், பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்க வழி வகை செய்துள்ளது.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

இதன்மூலம் பல வாகன ஓட்டிகள் தண்டனைப் பெற்று வருகின்றனர். இதில், மிக முக்கியமாக சாதாரண வாகன ஓட்டிகளே பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், ராயல் என்பீல்டு பைக்கின் உரிமையாளர் ஒருவர், புதிய விதிகளின்கீழ் தற்போது தண்டிக்கப்பட்டுள்ளார்.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

இந்த வாகனம் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி ரூ. 35 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, ராயல் என்பீல்டு புல்லட்மீது கூறப்பட்ட குற்றங்களை வரிசையாக பின்வருமாறு பார்க்கலாம்...

ஓட்டுநர் உரிமம் இல்லாதது.

பதிவு சான்று இல்லாதது.

மூன்றாம் நபர் காப்பீடு இல்லாதது.

மாசு சான்று இல்லாதது உள்ளிட்ட பல்வேறு முறைக்கேட்டில் அந்த பைக் ஈடுபட்டுள்ளது.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

அதுமட்டுமின்றி, அந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் தடை செய்யப்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முறைகேட்டிற்கு மேல் முறைகேட்டில் அந்த பைக் ஈடுபட்டிருப்பதை அறிந்த போலீஸார் பைக்கின் உரிமைாயளருக்கு அதற்கான பாடத்தை புகட்டியுள்ளனர். தொடர்ந்து, அத்தனைக்கும் சேர்த்தவாறு, ரூ. 35 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

இச்சம்பவம், டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள ஃபரிதாபாத் எனும் மிகவும் பிரபலமான சாலையில் அரங்கேறியுள்ளது. அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், மூவராக ராயல் என்பீல்டு பைக்கில் வந்தவர்களை மடக்கி ஆய்வு மேற்கொண்டதன் மூலமாகவே, இந்த விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

தொடர்ந்து, அந்த பைக்கை பறிமுதல் செய்த போலீஸார், அதனை காவல்நிலையம் எடுத்துச் சென்றனர். இந்த வாகனத்தை விடுவிக்க வேண்டுமானால், உரிய ஆவணத்தை காண்பித்து விட்டு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அபராதத்தையும் உடனடியாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

இதுபோன்ற சம்பவம் கடந்த 1ம் தேதியில் இருந்து வாடிக்கையாக மாறியுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் இத்தகைய அபராதம் குறித்த செய்தி வெளிவரும்போது, மக்களின் வயிற்றில் புளியை கரைப்பதைப் போன்று உள்ளது.

ரூ.35,000 அபராதம் செலுத்தும் ராயல் என்பீல்டு உரிமையாளர்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் அதிர்ந்துபோவீர்கள்!

இந்தியாவில் இன்னும் பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாட உணவிற்காக நூறு ரூபாய் சம்பாதிப்பதையே பெரும் சவலாக எண்ணி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் ஒரு மாத வருமானத்தைக் காட்டிலும் பல மடங்கு உள்ள அபராதத் தொகையை அமலுக்கு வந்திருப்பது மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை!

நாடுமுழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் புதிய அபாரதத் தொகை விதிக்கும் சம்பவங்கள் தினசரி வெளியாகி களேபரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய போலீசாரே அதனை மீறும் சம்பவங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.

வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை!

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் சாகியா டிஎஸ்பிதான் அந்த காவல் துறை உயர் அதிகாரி. டிராபிக் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது ஸ்டாப் லைனை கடந்து செல்ல கூடாது. சட்டப்படி இது தவறு.

வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை!

ஆனால் சாகியா டிஎஸ்பியின் அதிகாரப்பூர்வ கார் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தபோது, ஸ்டாப் லைனை கடந்து சென்றது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த சமயத்தில் காருக்குள் இருந்த 2 போலீஸ்காரர்களும் சீட் பெல்ட் வேறு அணியவில்லை. பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பிய பிறகுதான் அவர்கள் அவசர அவசரமாக சீட் பெல்ட் அணிய முயன்றனர்.

வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை!

சீட் பெல்ட் அணியாததும் கூட விதிமுறை மீறல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அருகில் இருந்து மற்றொரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம், அபராதங்கள் குறித்து அந்த பத்திரிக்கையாளர் கேட்டார். இதற்கு அந்த போலீஸ் அதிகாரி, ஸ்டாப் லைனை கடந்து சென்றால், 500 ரூபாய் அபராதம் என தெரிவித்தார்.

வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை!

இதன்பின் சீட் பெல்ட் அணியாததற்கு அபராதம் எவ்வளவு? என அந்த பத்திரிக்கையாளர் கேட்டார். இதற்கு அந்த போலீஸ் அதிகாரி, 1,000 ரூபாய் என பதில் அளித்தார். ஆக மொத்தம் 3,000 ரூபாய் அபராதம். 500 + 1,000 என மொத்தம் 1,500 ரூபாய்தானே அபராதம் வருகிறது என நீங்கள் நினைப்பது நன்றாக புரிகிறது.

வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை!

அரசு அதிகாரிகளோ அல்லது விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டிய காவல் துறை அதிகாரிகள் போன்றவர்களோ விதிமுறைகளை பின்பற்ற தவறினால், அதற்கான அபராத தொகையை இரு மடங்காக செலுத்த வேண்டும் என திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது சாதாரண வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை காட்டிலும் அவர்களுக்கு இரு மடங்கு அதிக அபராதம்.

எனவேதான் 3,000 ரூபாய் அபராதம். இதன்பின் அந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி, சலானை வினியோகித்து அபராத தொகையையும் வசூலித்து கொண்டார். ஆனால், எல்லா இடத்திலும் விதிமீறும் போலீசார் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.

புகைப்படங்கள் அனைத்து உதாரணத்திற்காக வழங்கப்பட்டவையே.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Haryana Police Seized Royal Enfield Bullet Under New MV Act. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X