புதிய சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ... மகிழ்ச்சியில் ஆர்பரிக்கும் மக்கள்!
ஹீரோ நிறுவனம், அதன் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அண்மைக் காலங்களாக இந்திய வாகனத்துறை சந்தித்து வரும் மிக மோசமானநிலையில் ஹீரோ நிறுவனமும் சிக்கி தவித்து வருகின்றது.

ஆகையால், சிறப்பு சலுகைகள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை தன் வசம் கவர்ந்திழுக்கும் விதமாக, ஹீரோ நிறுவனம் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதேசமயம், தற்போது நிலவி வரும் மந்த நிலையில் இருந்து தப்பிக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கையில் ஹீரோ களமிறங்கியுள்ளது.

அந்தவகையில், அனைவரையும் கவரும் வகையிலான மூன்று புதிய சலுகை திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், எக்ஸ்சேஞ்ச், லாயல்டி மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகை ஆகியவை அடங்கும்.
இதில், வாகன எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தின்கீழ், வாடிக்கைாயளர்கள் அவர்களுடைய பழைய ஸ்கூட்டர் அல்லது பைக்கினை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம். அவர்கள், வாகனத்தின் தன்மையை மதிப்பீடு செய்து, அதற்கான தொகையை புதிய ஸ்கூட்டரில் தள்ளுபடி செய்வார்கள்.

இத்துடன் கூடுதலாக ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியை, எக்ஸ்சேஞ்ச் முறையில் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட உள்ளது.
இதேபோன்று, லாயல்டி திட்டத்தின்கீழ், ஏற்கனவே ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருபவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இந்த சலுகை, ஏற்கனவே ஹீரோ வாகனத்தைப் பயன்படுத்தி வரும் உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர், மிக சுலபமான முறையை கையாள உள்ளது. அதாவது, ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஹீரோ தயாரிப்பின் ஆர்சி சான்றின் நகலை சமர்பிக்க வேண்டும். இதனை வழங்கினால், புதிதாக வாங்கப்பட உள்ள ஸ்கூட்டரில் இரண்டாயிரம் ரூபாய் குறைக்கப்படும்.

இதேபோன்று, ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள் ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், அவர்களுக்கு ரூ. 2,500 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, பைக் வாங்க விரும்பும் ஆசிரியர்களுக்கு ரூ. 1,500 சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

தற்போது ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையின் கால அவகாசம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சலுகையின்கீழ் ஏற்கனவே விற்பனைத் தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹீரோ நிறுவனத்தின் இந்த சிறப்பு சலுகைகள் அதன் அனைத்து ரக ஸ்கூட்டர்களுக்கும் பொருந்தும். அந்தவகையில், டெஸ்டினி 125, டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ், மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ப்ளஸ்ஸர் மற்றும் ப்ளஸ்ஸர் ப்ளஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த அதிரடி சலுகைக்கு, அண்மைக் காலங்களாக சந்தித்து வரும் விற்பனைச் சரிவே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த சரிவை ஹீரோ நிறுவனம் மட்டுமின்றி நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் சந்தித்து வருவது குறிப்பிடத் தகுந்தது.

இதன் காரணமாக, பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி அளவைக் குறைந்து வருகின்றன. மேலும், தற்காலிகமாக பணியாளர்களையும் வெளியேற்றி வருகின்றது. இத்துடன், நாட்டில் செயல்பட்டு வரும் வாகன ஷோரூம்களும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இதனால், அவற்றில் பணியாற்றி வந்த ஊழிகள் கொத்து கொத்தாக வீட்டுக்கு கிளம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் விதமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனடிப்படையிலேயே, ஹீரோ நிறுவனமும் இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








