ஹீரோ டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய தகவல்!
ஹீரோ நிறுவனத்தின் டேஷ், அதன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள்குறித்த முக்கியமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய இருசக்கர வாகன உலகில் ஜம்பவனாக செயல்பட்டு வரும் ஹீரோ நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டேஷ் என பெயிரடப்பட்டுள்ள இந்த மின்சார ஸ்கூட்டர்களுக்கு ரூ. 62,000 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஹூரோ நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய பிராண்ட் பெயரில், ஆப்டிமா இ5 மற்றும் நைக்ஸ் இ5 ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் களமிறக்கப்பட்டு உள்ளன.
இந்த ஸ்கூட்டர்களில் 48V கொண்ட 28Ah லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான சார்ஜில் 60 கிமீ தூரம் வரை செல்லும் திறனை வழங்கும்.

இத்துடன், இந்த ஸ்கூட்டர்களில் மிக வேகமாக சார்ஜ் செய்து கொள்ளும் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், 0-த்தில் இருந்து 100 சதவீத சார்ஜ் செய்ய வெறும் 4 மணி நேரங்களே போதுமானதாக இருக்கின்றது.
இந்த இரு ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவது மிகவும் சுலபமானது என்று டேஷ் தெரிவித்துள்ளது. மேலும், இந்த உயர்தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பராமரிப்பதும் மிகவும் எளிமையானது என அது கூறுகின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முழுக்க முழுக்க இந்தியர்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையல், இந்திய சாலையில் மிகவும் சுலபமாக பயணிக்கும் வகையில், 145மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தரத்தில் மட்டுமின்றி சிறப்பம்சங்களிலும் மேன்மைக் கொண்டு காணப்படுகின்றது. அந்தவகையில், எல்இடி தரத்திலான ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்கள், ஸ்கூட்டரின் இரு முனைக்கும் ட்யூப் லெஸ் டயர், ஸ்போர்ட்டி ட்யூவல் டோன் நிறம், கவர்ச்சியான கிராஃபிக்குகள் உள்ளிட்டவை வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக, ரிமோட் மூலம் திறக்கின்ற வகையிலான பூட், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்விறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகம்குறித்து ஹீரோ எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ சோஹிந்தர் கில் கூறியதாவது, "புதிய டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகம் லாபகரமானது. இந்த ஸ்கூட்டர் லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், சிறந்த ஸ்டைல், அதிக திறன், சக்தி வாய்ந்த லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளது. இது இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது அனைத்து டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்கின்றது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள 615 டச் பாயிண்டுகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இதனை வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் 1,000-ஆக அதிகரிக்க ஹீரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

டீலர்கள் விரிவாக்கம் தவிர, ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை ஆண்டுக்கு 5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீட்டிற்கு அது அழைப்பு விடுத்துள்ளது.

டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தோடு, இஆர் ரேஞ்சில் களமிறங்க காத்திருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஹீரோ எலெக்ட்ரிக் காட்சிப்படுத்தியுள்ளது. அந்தவகையில், ஆப்டிமா இஆர் மற்றும் நைக்ஸ் இஆர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் டேஷ் பிராண்டின் அதிவேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இதில், ஆப்டிமா இஆர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 68,721 என்ற விலையும், நைக்ஸ் இஆர் மாடலுக்கு ரூ. 69,754 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹீரோ டேஷ் பிராண்டின் அனைத்து மின்சார ஸ்கூட்டர்களும், ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஏத்தர் மற்றும் விரைவில் களமிறங்க உள்ள பென்லிங் ஆரா உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








