திடீரென இரு மாடல் பைக்குகளின் விலையை உயர்த்திய ஹீரோ... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் பிரபலமான இரு மாடல் மோட்டார்சைக்கிள்களின் விலையை திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது.

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களான எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் அதன் சகோதர மாடலாக இருக்கும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய இரு மாடல்களின் விலையையும் உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை பைக்வேல் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இந்த இரு பைக்குகளின் விலையிலும் ரூ. 1,000 உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் விலை ரூ. 99,400 ஆகவும், எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலின் விலை ரூ. 91,999 என்றும் மாற்றமடைந்துள்ளது. இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். முன்னதாக, எக்ஸ்ட்ரீம் 200ஆர் ரூ. 90,000 என்ற விலையிலும், எக்ஸ்ட்ரீம் 200எஸ் 98,400 என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதேபோன்று, அதன் சகோதர மற்றும் மிகுந்த அழுகுமிக்கக மாடலான எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலை, கடந்த மே மாதம் 1ம் தேதி அந்நிறுவனம், அறிமுகம் செய்தது.

இந்த இரு பைக்கிலும் ஹீரோ நிறுவனம் ஒரே திறன் எஞ்ஜினைதான் பயன்படுத்துகின்றது. அந்தவகையில், 199.6 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜின் இந்த இரு பைக்குகளிலும் காணப்படுகின்றது. இது, 18.4 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 17.1என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

எஞ்ஜினை ஒரே மாதிரியாகப் பெற்றிருக்கும் இந்த பைக்குகள், டிசைனில் மாறுபட்டு காணப்படுகின்றன. அந்தவகையில், இரு பைக்குகளும் வெவ்வேறான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அவ்வாறு, எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ஸ்ட்ரீட் நேக்கட் ரகத்தில் ஆர்ரோஷமான காட்சியை வெளிப்படுத்தும் வகையில் டிசைனைப் பெற்றிருக்கின்றது.

அதற்கேற்ப வகையிலான வடிவமைப்பையே அதன் சிறப்பம்சங்களும் பெற்றிருக்கின்றன. அதேபோன்று, முழுக்க முழுக்க அழுகூட்டப்பட்ட மாடலாக காட்சியளிக்கின்றது. மேலும், இந்த பைக் நேக்கட் ரகத்தில் காட்சியளிக்கின்றது. இத்துடன், ஏரோடைனமிக் அம்சம் மிகவும் நேர்த்தியாக ஸ்மூத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், பைக்கினை மேலும் கவர்ச்சியாக காட்டும் வகையில், அதன் ஹெட்லேம்பிற்கு ட்வின் எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, தோற்றத்திற்கான சிறப்பம்சத்தில் மாறுபட்டு காணப்படும் இந்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய இரு பைக்குகளிலும் எஞ்ஜினைப் போன்றே, சஸ்பென்ஷன் அமைப்பும் ஒரே மாதிரியானதாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இரு பைக்குகளிலும், அதன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ-ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன், சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக இரு பைக்குகளிலும், இரு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சிங்கிள் ஆன்டி லாக் பிரேக்கிங் வசதி, அவற்றில் கூடுதலாக வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








