தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் தற்போது ''டல்'' அடிப்பதால், முன்னணி நிறுவனங்களே தடுமாறி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான, இரு சக்கர வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட்டில் தற்போது மந்த நிலை நிலவி கொண்டிருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. மார்க்கெட் ''டல்'' காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சில நிறுவனங்கள் சிறிய அளவிலான வளர்ச்சியை மட்டும் பதிவு செய்துள்ளன.

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

இந்தியாவின் நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,05,355 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த மாதத்தில், 6,00,616ஆக சரிந்துள்ளது. இது 1 சதவீத வீழ்ச்சியாகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எதிர்வரும் மாதங்களில், ஸ்கூட்டர்கள் மற்றும் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை களமிறக்கவுள்ளது. எனவே அப்போது நிலைமை மாறி, விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் 4,08,559 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு இதே மாதத்தில், 4,89,638 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் 17 சதவீத வீழ்ச்சியை ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சந்தித்துள்ளது.

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 1 சதவீதம் மட்டும்தான். 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 2,31,582 இரு சக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,30,353ஆக மட்டுமே இருந்தது. இது 1 சதவீத வளர்ச்சியாகும். விற்பனை வளர்ச்சியில், டிவிஎஸ் ஜூபிடர், என்டார்க் 125 ஆகியவை முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

MOST READ: இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று, பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனமும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சி 6.3 சதவீதமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் 1,86,523 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது 2018 பிப்ரவரியில் 1,75,489ஆக மட்டுமே இருந்தது.

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

டிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் தவிர யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் வளர்ச்சியை சந்தித்துள்ளது. யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் 64,797 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 60,907 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 6.4 சதவீத வளர்ச்சியாகும்.

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

மறுபக்கம் ராயல் என்பீல்டு நிறுவனம் பலத்த அடி வாங்கியுள்ளது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 71,354 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து அசத்தியிருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 60,066ஆக சரிவடைந்துள்ளது. இது 15.8 சதவீத வீழ்ச்சி. ஜாவாவின் வருகை இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

இப்படி முன்னணி நிறுவனங்கள் எல்லாம் திணறி கொண்டிருக்கும் சூழலில், சுஸுகி நிறுவனம் 23.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 46,147 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த மாதத்தில் 57,173ஆக உயர்ந்துள்ளது.

MOST READ: உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...

தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...

இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் மந்தமான நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர இரு சக்கர வாகனத்தை வாங்கும் திட்டத்தை வாடிக்கையாளர்கள் பலரும் ஒத்தி வைத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் மார்க்கெட் ''டல்'' அடிக்கிறது. எனினும் வருங்காலங்களில் மந்தநிலை நீங்கி, மார்க்கெட் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil
English summary
Hero, Honda, Royal Enfield Sales Down In February 2019-TVS, Bajaj, Yamaha, Suzuki Post Growth. Read in Tamil
Story first published: Sunday, March 17, 2019, 8:30 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more