உழைப்பாளர்கள் தினத்தன்று ஹீரோ ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து: என்ன தெரியுமா?
ஹீரோ நிறுவனத்தின் ரசிகர்களுக்கு வருகின்ற மே மாதம் 1ம் அன்று மிகப்பெரிய விருந்து ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ நிறுவனம், எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை வருகின்ற மே மாதம் 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான மெருகேற்றப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200ஆர்/கரிஷ்மா 200 பைக்குகளையும் வருகின்ற மே மாதம் 1ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஐஏபி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த பைக்குகளின் வெளியீட்டிற்காக அனைத்து ஆட்டோதுறை பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆகையால், வருகின்ற 1ம் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் எக்ஸ்பல்ஸ் இரட்டையர்களின் வெளியீட்டின்போது, அழகு கூட்டப்பட்ட மாடலாக உருவாகியிருக்கும் எக்ஸ்ட்ரீம் 200ஆர்/கரிஷ்மா 200 ஆகிய மோட்டார்சைக்கிள்களும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக மெருகேற்றப்பட்டிருக்கும் கரிஷ்மா200 பைக் குறித்த வீடியோ ஒன்று அண்மையில் யுடியூபில் உலா வந்தது. முன்னதாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த மோட்டார்சைக்கிள் குறித்த தகவல் ஒன்று பரவியது, அதில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 200சிசி கொண்ட மெருகேற்றப்பட்ட புதிய மாடல் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக கூறப்பட்டன. அந்த மோட்டார்சைக்கிளில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருப்பதகாவும் தகவல்கள் தெரிவித்தன.

அவ்வாறு கூறப்பட்ட மோட்டார்சைக்கிளைத்தான் தற்போது புதிதாக அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த, புதிய மாடல் மோட்டார்சைக்கிள் பிஎஸ்6 உமிழ்வு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் இரட்டையர்களின் வெளியீட்டின்போதே அறிமுகமாக இருக்கின்றன.

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற 1ம் தேதி களமிறங்க இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, 199.5 சிசி கொண்ட ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. இது, அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவரையும், 17.1 என்எம் டார்க் திறனை வழங்கும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், நவீன தொழில்நுட்பங்களாக யுஎஸ்பி சார்ஜிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ப்ளூ-டூத் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களும் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிபார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








