ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

பஜாஜ் மற்றும் யமஹா நிறுவங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஹீரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்த மாதம் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி என இரு பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள நிலையில் தற்போது புதிய ஹீரோ எச்எக்ஸ்200ஆர் பைக்கை அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பல வெற்றிகரமான பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனையில் சாதனை படைத்தது வருகிறது. ஹீரோ ஸ்பிளென்டர், பேஸன் ப்ரோ போன்ற பைக்குகள் விற்பனையில் மற்ற நிறுவன பைக்குகளை பின்னுக்கு தள்ளியது. பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம் ஹீரோ நிறுவனத்தின் நேரடி போட்டியாளராக கருதப்பட்டனர்.

ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

இந்நிலையில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி என இரு பைக்குகளை அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்தது. எக்ஸ்பல்ஸ் 200 பைக் 199சிசி என்ஜினுடன் அட்வென்ஜர் பைக் ஸ்டைலிலும், எக்ஸ்பல்ஸ் 200டி 199சிசி என்ஜினுடன் டூரிங் வெர்சனாக வரவுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு விதமான தோற்றத்தில் பைக்குகளை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்வது இதன் போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

தற்போது ஹீரோ நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான எச்எக்ஸ்200ஆர் பைக்கை அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதம் மூன்று ஹீரோ பைக்குகள் விற்பனைக்கு களம் இறங்குவதால் இதன் போட்டி நிறுவனமான பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம் கலக்கத்தில் உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் கரிஷ்மா ஆர் பைக் தயாரிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் அதன் இடத்தை பூர்த்திசெய்ய எச்எக்ஸ்200ஆர் பைக்கினை அறிமுகம் செய்கிறது.

ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

ஹீரோ எச்எக்ஸ்200ஆர் பைக்கில் டூயல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட் போன்களை கனெக்ட் செய்யும் வசதியுடன் வருகிறது. மேலும் இதில் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதியும் உள்ளது. எச்எக்ஸ்200ஆர் ஸ்ப்ளிட் சீட், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், அலாய் வீல்கள் போன்ற வசதியடன் விற்பனைக்கு வருகிறது.

ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

ஹீரோ எச்எக்ஸ்200ஆர் பைக்கின் 199 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 20 பிஎச்பி மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் என்ஜின் ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200 பைக்கின் தொழில்நுட்பத்தை கொண்டது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 மற்றும் யமஹா பேஸர் 250 பைக்குகளுக்கு போட்டியாக ஹீரோ எச்எக்ஸ்200ஆர் பைக் விற்பனைக்கு வருகிறது.

ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் எச்எக்ஸ்250ஆர் கான்சப்ட் அறிமுகம் செய்யப்பட்டு கைவிட பட்ட நிலையில் தற்போது ஹீரோ எச்எக்ஸ்200ஆர் பைக் விற்பனைக்கு வருவது ஹீரோ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே மாதத்தில் மூன்று ஹீரோ பைக்குகள் விற்பனைக்கு களம் இறங்குவதால் ஹீரோ நிறுவனம் மீண்டும் விற்பனையில் சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் புதிய 200சிசி பைக்: கலக்கத்தில் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவனம்

பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 250 பைக்கை அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள நிலையில் யமஹா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த யமஹா எம்டி-15 பைக்கும் விலை அதிகம் காரணமாக விற்பனையில் மந்தநிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஹீரோ நிறுவனத்தின் மூன்று பைக்குகளின் அறிமுகம் பஜாஜ் மற்றும் யமஹா நிறுவங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source:Iambiker

Most Read Articles
English summary
hero hx200r launch to happen next month in india
Story first published: Friday, April 26, 2019, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X