ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்!

ஹீரோ-யமஹா ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள இ-சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் சைக்கிள்

இந்தியாவின் தற்போதைய சுற்றுப்புறச் சூழல் நிலையைப் பார்த்தால், உடனடியாக அனைத்து எரிபொருள் வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, எந்தவொரு பக்க விளைவையும் ஏற்படுத்தாத வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே அனைத்து சுற்றுப்புறச் சூழலை விரும்புபவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அதற்கேற்ப வகையில், நாள்தோறும் அதிகரித்து வரும் எரிபொருள் வாகனங்களின் எண்ணிக்கை பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

ஆகையால், மக்கள் மத்தியில் மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பங்காக மின்வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், சிறப்பு சலுகை வழங்குதல் மற்றும் வரி குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு செய்து வருகின்றது.

இதன்காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் மின்வாகனங்களை அறிமுகம் செய்வதில் முனைப்பைக் காட்டி வருகின்றன.

இந்நிலையில், ஹீரோ நிறுவனமும் இந்தியர்களைக் கவர்கின்ற வகையில் இ-சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை யமஹா நிறுவனத்தின் கூட்டணியில் அது உருவாக்கியுள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் சைக்கிள்

ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய இ-சைக்கிளுக்கு லெக்ட்ரோ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. லெக்ட்ரோவின் வரிசையில் இஎச்எக்ஸ்20 என்ற மாடல்தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 1.3 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-சைக்கிளை ஹீரோ நிறுவனம் உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்க யமஹாவின் ஸ்மார்ட் பவர் வாகன வர்த்தக பிரிவுடன் கைகோர்த்துள்ளது.

லெக்ட்ரோ இஎச்எக்ஸ்20 இ-சைக்கிள் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், மிக முக்கியமான அம்சமாக கழட்டி மாட்டுகின்ற வகையிலான பேட்டரி மற்றும் நடுவில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் காட்சியளிக்கின்றது. இவ்விரு அம்சங்களும் யமஹாவின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 3 முதல் 5 மணி நேரத்திற்குள்ளாகவே முழுமையான சார்ஜிங் அளவை எட்டி விடுகின்றது. இது சார்ஜ் செய்யும் இடத்தைப் பொறுத்தது. மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 80 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

இந்த அளவு திறனைக் கொண்ட இஎச்எக்ஸ்20 இ-சைக்கிளில் அதிக எடைக் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என நினைக்க வேண்டாம்.

ஏனென்றால், இந்த இ-சைக்கிளில் 2 கிலோ அளவு எடைக் கொண்ட பேட்டரியேப் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே இத்தகைய அதீத அளவிலான திறனை வெளிப்படுத்துகின்றது.

தொடர்ந்து, இஎச்எக்ஸ்20 இ-சைக்கிளில் டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு தேவையான அனைத்து தகவலையும் வழங்கும். அதாவது, பேட்டரி அளவு, வேகம், இ-சைக்கிளில் உள்ள மோட்கள் உள்ளிட்டவை குறித்த அனைத்து தகவலை திரைமூலம் வெளிப்படுத்தும்.

ஹீரோ எலெக்ட்ரிக் சைக்கிள்

இத்துடன், பாதுகாப்பான ரைடிங் வசதிக்காக ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக் சைக்கிளின் இரு முனைகளிலும் நிறுவப்பட்டுள்ளது. இதேபோன்று, சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக ஹைட்ராலிக் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இ-சைக்கிளைப் பற்றிய தகவல் தற்போது மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2019, 19:36 [IST]
English summary
Hero Lectro EHX20 E-Cycle Revealed In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+