புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் சந்தையை கட்டம் கட்டும் விதத்தில், 110சிசி மற்றும் 125சிசி ரகத்தில் இரண்டு புதிய ஸ்கூட்டர் மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில், முதலாவதாக ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலின் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ மோட்டோகார் நிறுவனம், 125 சிசி மார்க்கெட்டில் டெஸ்ட்டினி என்ற மாடலை அறிமுகம் செய்தது. இதையடுத்து, இரண்டாவது மாடலாக மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் டிரம் பிரேக் வேரியண்ட்டிற்கு ரூ.58,500 விலையும், டிஸ்க் பிரேக் வேரியண்ட்டிற்கு ரூ.60,000 விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் மாடலுக்கு ரூ.62,700 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 125சிசி எஞ்சின்தான் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலின் எஞ்சின் 9.1 பிஎச்பி பவரை அளிக்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் ஐ3எஸ் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வு அம்சத்தையும் பெறுகிறது.

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் சாதாரண டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகவும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்படுகின்றன. ஹீரோவின் ஐபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் பெரிய ஹெட்லைட் ஹவுசிங்கும், நேர்த்தியாக வடிவமைக்ககப்பட்ட முன்புற அப்ரான் பகுதியும் கவர்கின்றன. க்ளியர் லென்ஸ் கண்ணாடிகளுடன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரு விதமான வண்ணக்கலவையில் பாகங்கள் தெரிகின்றன.

இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சர்வீஸ் ரிமைன்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், யுஎஸ்பி மொபைல் சார்ஜர் போர்ட், பூட் லைட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் நீலம், பழுப்பு, சாம்பல் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு மேட் ஃபினிஷ் வண்ணங்களில் கிடைக்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடலானாது பியர்ல் ஃபேட்லெஸ் ஒயிட் மற்றும் பாந்தர் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








