இளைய தலைமுறையினரை கவரும் வகையில் களமிறங்கும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்125: வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!

ஹீரோ நிறுவனம் இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் களமிறங்கும் ஹீரோ மேஸ்ட்ரோ: வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!

இருசக்கர வாகன தயாரிப்பில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஹீரோ நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியின்போது, அதன் இரண்டு 125 சிசி திறனுடைய ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. அந்தவகையில், டூயட் 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்களைத்தான் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் களமிறங்கும் ஹீரோ மேஸ்ட்ரோ: வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!

இதில், டூயட் 125 ஸ்கூட்டரை ரீபிளேஸ் செய்த ஹீரோ நிறுவனம், அதற்கு பதிலாக டெஸ்டினி125 ஸ்கூட்டரை விற்பனைச் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது மேஸ்ட்ரோ எட்ஜ்125 ஸ்கூட்டரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் களமிறங்கும் ஹீரோ மேஸ்ட்ரோ: வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!

இதுகுறித்து கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் சிஎஃப்ஓ நிரஞ்சன் குப்தா, "மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மே மாதத்தின் மத்தியில் நிச்சயம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும்" என தெரிவித்தார். இந்த கூற்றின்படி, இந்த புதிய மாடல் 125சிசி ஸ்கூட்டர் இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் களமிறங்கும் ஹீரோ மேஸ்ட்ரோ: வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஸ்கூட்டரில் நிரந்தர அம்சங்களுடன் சில தொழில்நுட்ப அம்சங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, சர்வீஸ் ரிமைண்டருடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், டுயூவல் டோன் கண்ணாடிகள், பூட் லைட், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் வெளிப்புற ஃப்யூவல் பில்லர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் களமிறங்கும் ஹீரோ மேஸ்ட்ரோ: வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!

மேலும், புதிய வரவாக இருக்கும் இந்த ஸ்கூட்டரில் 124.6சிசி திறனை வெளிப்படுத்தும் ஏர் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.70 பிஎச்பி பவரை 6,750 ஆர்பிஎம்-லும், 10.2 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்-லும் வெளிப்படுத்தும். இத்துடன் பிரத்யமாக இந்த ஸ்கூட்டரில் ஹீரோ நிறுவனம் ஐ3எஸ் எனப்படும் ஃப்யூவல் சிப்பிங் டெக்னாலஜியை இணைத்துள்ளது.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் களமிறங்கும் ஹீரோ மேஸ்ட்ரோ: வெளியீடு குறித்த சிறப்பு தகவல்!

இதைத்தொடர்ந்து, பயணிகளின் சொகுசான பயண அனுபத்திற்காக இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் டேம்பர் வசதி கொண்ட சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பு வசதியாக சிபிஎஸ் வசதியுடன் கூடிய டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த ஸ்கூட்டரின் பிரீமியம் வேரியண்டில் மட்டும் முன் பக்க வீலுக்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

source: indianautosblog.com

Most Read Articles
English summary
Hero Maestro Edge 125 Officially Confirmed For Launch. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X