என்ன ஆச்சு நம்ம இரு சக்கர வாகனங்களின் தலைவனான ஹீரோ மோட்டோர்ஸுக்கு...? சோகத்தில் ஹீரோ மோட்டோ கார்ப்!
நாட்டில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் விற்பனை நடப்பு நிதியாண்டில் சரிவைச் சந்தித்திருப்பதாக அந்த நிறுழனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்ஸ், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றது. அந்த வகையில் பட்ஜெட் மற்றும் அதிகவிலைக் கொண்ட இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் தயாரித்து விற்பனைச் செய்கின்றது.

நாட்டில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஹீரோ மோட்டோகார்ப்பின் பைக்குகளும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7 லட்சம் யூனிட்கள் வரை இந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இதன்காரணமாகவே, இந்த ஹீரோ பைக்குகளை இருசக்கர வாகனங்களன் தலைவன் என்றும் சிலர் அழைத்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புடைய இந்த நிறுவனம் தற்போது விற்பனையில் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நிதியாண்டில் சுமார் 6 லட்சத்து 29 ஆயிரத்து 597 பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது. ஆனால், இந்த தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிதியாண்டில் 6 லட்சத்து 17 ஆயிரத்து 215 பைக்குகளே விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 1.96 சதவீதம் குறைவாகும்.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் அதாவது முதல் காலாண்டில் ஹீரோ நிறுவனம் எதிர்பார்த்த இலக்கை எட்டமுடியவில்லை. இதனால், தற்போது இந்த நிறுவனம் சற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்த சரிவினை ஈடுசெய்யும் விதமாகவும், தனது இருசக்கர வாகனச் சந்தையை தக்க வைத்துக்கொள்ளும் விதமாகவும், ஹீரோ நிறுவனம் வருகின்ற மாதங்களில் புதிய பிரிமீயம் மாடல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பணியல் நிறுவனம் முணைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த விற்பனை சரிவுக் குறித்து ஹீரோ மோட்டோகார்ப் கூறியதாவது, "இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாட்டில் அதிகமாகவே உள்ளது. ஆனால், ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதால் வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகாமல் உள்ளது. தற்போது உள்ள 28 ஜிஎஸ்டி வரியானது 18 சதவீதம் வரை குறைந்தால் விற்பனை அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








