தொடரும் அவலம்... மஹிந்திராவை அடுத்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹீரோ...
நாட்டில் இயங்கி வரும் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றது. இதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இணைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகன சந்தை அண்மைக் காலங்களாக கடுமையான சோக காலத்தைச் சந்தித்து வருகின்றது. இதனால், பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு, விற்பனை வீழ்ச்சியே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதனால், நாட்டில் இயங்கும் பல நிறுவனங்கள் அதன் உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளது. இத்துடன், அதிரடி நடவடிக்கைகளையும் அவை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில, அவர்களின் நிறுவனங்களில் பணியாற்றி வந்த தற்காலிக பணியாளர்களை வெளியேவேற்றி வருகின்றது. மேலும், ஆட்டோ துறைச் சார்ந்து இயங்கும் லட்சக்கணக்கானோர்களும் இதிலிருந்து வெளியேற்றப்படும் அபாய சூழல் இருப்பதாக வாகனத்துறை வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்திய வாகனத்துறை கடுமையான சரிவைச் சந்தித்து வருவதுடன், வருவாய் இழப்பு போன்ற பல இன்னல்களையும் அது எதிர்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, அதன் உற்பத்தி ஆலையை 8 முதல் 14 நாட்கள் வரை தற்காலிமாக மூடவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதனால், இந்த நாட்களில் வாகன உற்பத்தி அனைத்தும் தடை செய்யப்படும்.

இந்த காலகட்டத்தில் மஹிந்திரா வாகனங்களின் விற்பனைகுறித்த ஆய்வு செய்யப்பட்டு, இதன் முடிவை வைத்து வரும் காலங்களுக்கு தேவையான வாகனங்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மஹிந்திராவின் இதேபோன்றதொரு அறிக்கையை நாட்டின் இருசக்கர ஜாம்பவான் நிறுவனமான ஹீரோவும் அறிவித்துள்ளது. இந்நிறுவனம், தொடர்ச்சியாக வருகின்ற ஆகஸ்ட் 18ம் வரை உற்பத்தி செய்யாது என அறிவித்துள்ளது. நேற்று தொடங்கிய இந்த முடக்கம், நான்கு நாட்களுக்கு தற்காலிமாக நிலவ இருப்பதாக ஹூரோ அறிவித்துள்ளது.

வரும் காலங்களுக்கு தேவையான அளவு வாகனங்களை உற்பத்தி செய்யவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வாகனங்களை தற்போதைய விற்பனை விகதத்திற்கு ஈடாக்கும் வகையில், இந்த நடவடிக்கையை ஹீரோ நிறுவனம் கையாண்டுள்ளது.
அதேசமயம், ஹீரோ நிறுவனம் அறிவித்த நாட்களில் அரசு விடுமுறை நாட்களும் உள்ளிடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

உற்பத்தி ஆலையின் தற்காலிக முடக்கம்குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது எங்கள் உற்பத்தியை முன்கூட்டியே திட்டமிட எங்களுக்கு உதவும். இதன்மூலம் தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க மற்றும் குறைக்க இந்த காலக்கட்டம் உதவும்" என கூறப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், நடப்பாண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை உள்ளிட்ட காலக்கட்டத்தில் கணிசமான விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. அந்தவகையில், 12.03 சதவீதம் அளவிலான விற்பனை வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இந்த கடுமையான சரிவின் காரணமாகவே, ஹீரோ நிறுவனம் இத்தகைய முடிவை தற்போது கையாண்டுள்ளது.

அதேசமயம், ஹீரோ நிறுவனம் மட்டுமின்றி நாட்டின் மேலும் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதில் நாட்டின் மிகப் பெரிய ஜாம்பவானான டாடா நிறுவனமும் தப்பிக்கவில்லை. அந்தவகையில், கடந்த மாதத்தில் டாடா நிறுவனம் 31 சதவீதத்தையும், மஹிந்திரா நிறுவனம் 16 சதவீத சரிவையும் சந்தித்தித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








