ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

ஹீரோ நிறுவனத்தின் ட்வின் மாடல் பைக்குகளில் ஒன்றான எக்ஸ்பல்ஸ் 200 மாடல், ஹீரோ ஷோரூம்களை வந்தடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ நிறுவனம், கடந்த மே மாதம் 1ம் தேதி, அதன் ட்வின் மாடல் மோட்டார்சைக்கிள்களான எக்ஸ்பல்ஸ் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்குகள்தான் அவ்வாறு களமிறக்கப்பட்டன. இந்த மாடல்களுடன் முழுக்க அழகுபடுத்தப்பட்ட மாடலாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலும் ஆச்சரிய வெளியீடாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

இந்த பைக்குகளுக்கான புக்கிங்கும் அன்றைய தினமே துவங்கியது. இந்தநிலையில், ஹீரோ நிறுவனம் இந்த பைக்குகளின் டெலிவரியை ஜீன் மாதத்தின் முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டது. ஆனால், இதில் எக்ஸ்பல்ஸ் 200 கார்புரேட்டர் வெர்ஷனில் அறிமுகமான பைக் மட்டும் விடுப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த பைக்கையும் ஹீரோ நிறுவனம், இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

இதுகுறித்த செய்தியை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், எக்ஸ்பல்ஸ் 200 கார்புரேட்டர் வெர்ஷன் பைக்குகள் ஹீரோ நிறுவனத்தின் டீலர்களை வந்தடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இது மற்றுமொரு வேரியண்டாக ப்யூவல் இன்ஜெக்டட் ரகத்திலும் கிடைக்கின்றது. இதில், கார்புரேட்டர் வெர்ஷன் ரூ. 97 ஆயிரமாகவும், ப்யூவல் இன்ஜெக்டட் வெர்ஷன் ரூ. 1.05 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

ஹீரோ நிறுவனத்தின் இந்த மூன்றும் பைக்குகளும் உருவத்தில் வெவ்வேறாக இருந்தலும், எஞ்ஜின் திறனில் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அந்தவகையில், இந்த மூன்று பைக்குகளிலும் 200சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 2 வால்வ் ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 18.4 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ப உயர்த்தப்பட்ட மட்குவார்ட் அமைப்பு, அதன் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்ஜின் பேஸ் குவார்ட், ஸ்வெப்ட் அப் எக்சாஸ்ட் மற்றும் க்னக்கிள் குவார்ட் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், இந்த பைக்கில் 21 இன்சிலான ஸ்போக்ஸ் வீல் முன்பக்கத்திலும், 18 இன்சிலான ஸ்போக்ஸ் வீல் பின்பக்கத்திலும் நிறுவப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

தொடர்ந்து சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பிற்காக 37 மிமீ அளவு கொண்ட டெலிஸ்கோபிக் அப் முன்பக்கத்திலும், 10 ஸ்டெப் ப்ரீ லோடட் மோனோசாக் பின்பக்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, டூரிங் மாடலான 200டி மாடலிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சாலை பயணத்திற்கு ஏற்ப அம்சங்களே இந்த பைக்கில் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

200டி மோட்டார்சைக்கிளின் இரு பக்க வீலிலும் 17 இன்சிலான அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரப்பர் ரகத்திலான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. எக்ஸ்பல்ஸின் இந்த இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர்தான் பொருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போனை, பைக்குடன் கனெக்ட் செய்ய முடியும். இத்துடன், இந்த எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரில் நேவிகேஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள்... விரைவில் தொடங்கும் டெலிவரி!

புதிதாக களமிறங்கியுள்ள ஹீரோ நிறுவனத்தின் இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் 276 மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக் முன்பக்கத்திலும், 220 மிமீ அளவு கொண்ட டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிங்கிள் சேனல் ஆன்டிலாக் பிரேக்கிங் வசதி பாதுகாப்பு அமைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் மிகவும் அழகுப்படுத்தப்பட்ட மாடலாக களமிறக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2019, 14:34 [IST]
English summary
Hero Xpulse 200 Starts Reaching Showrooms. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+