மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

மிகவும் மலிவான விலையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எக்ஸ்பல்ஸ் (XPulse) மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் இன்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிள் முதல் முறையாக 2017 எக்மாவில் (EICMA) காட்சிப்படுத்தப்பட்டது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

எக்மா என்பது இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ஆகும். இதன்பின் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலும், எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் காட்சிக்கு வைத்தது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஆனால் எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யாமல் ஹீரோ நிறுவனம் கால தாமதம் செய்து வந்தது. என்றாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான் எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் இன்று (மே 1) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பல்ஸ் 200 (XPulse 200) மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி (XPulse 200T) என மொத்தம் 2 வேரியண்ட்களில், இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

இதில் எக்ஸ்பல்ஸ் 200 மாடலானது, ப்யூயல் இன்ஜெக்ஸன் (FI - Fuel Injection) மற்றும் கார்புரேட்டட் (Carburetted) என மொத்தம் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் எக்ஸ்பல்ஸ் 200டி மாடல், கார்புரேட்டட் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் (Hero Xtreme 200R) மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும், 200 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

என்றாலும் எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலில், ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டத்தை ஹீரோ நிறுவனம் சேர்த்துள்ளது. தற்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஏற்கனவே குறிப்பிட்டபடி எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் மட்டுமே, ப்யூயல் இன்ஜெக்ஸன் சிஸ்டம் கிடைக்கும். எக்ஸ்பல்ஸ் 200டி மாடல், கார்புரேட்டட் வெர்ஷனுடன் மட்டுமே வருகிறது. இதன் இன்ஜின் கார்புரேட்டட் வெர்ஷன்தான் என்றாலும் கூட, எக்ஸ்பல்ஸ் 200 அளவிற்கான பவர், டார்க்கை உருவாக்கும்.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடல், ஆஃப் ரோடு வேரியண்ட் ஆகும். அதே சமயம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி, ஆன் ரோடு வேரியண்ட் ஆகும். ஆஃப் ரோடு, ஆன் ரோடுக்கு ஏற்ற வகையில், இரண்டு வேரியண்ட்களின் வடிவமைப்பும் மாறுபடுகிறது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஆனால் மெக்கானிக்கலாக இரண்டு வேரியண்ட்களும் ஒன்று போலவே உள்ளன. இந்த 2 மாடல்களிலும், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதேபோன்று ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களிலும், ஒரே மாதிரியான வசதிகள்தான் இடம்பெற்றுள்ளன.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

இந்த 2 மாடல்களும், முழு எல்இடி ஹெட்லேம்ப் செட் அப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்ஸ் ஆகியவற்றை பெற்றுள்ளன. அத்துடன் நேவிகேஷன் மற்றும் ப்ளூ டூத் கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய அதிநவீன டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய மாடல்களின் இரண்டு சக்கரங்களிலும் ஸ்டாண்டர்டாக டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு மாடல்களிலும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியையும் ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 வேரியண்ட் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் ப்யூயல் இன்ஜெக்ஸன் வெர்ஷனில், பச்சை, வெள்ளை, க்ரே ஆகிய மூன்று வண்ணங்களும், கார்புரேட்டட் வெர்ஷனில் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களும் வழங்கப்படுகின்றன.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

அதே சமயம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள், சிகப்பு, கருப்பு, கோல்டு மற்றும் க்ரே என 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிள்களை டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணியை ஹீரோ நிறுவனம் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

அதன்பின் ஹீரோ நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். இந்த 2 மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது. நடப்பு மாத இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கும்.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல்களின் விலை விபரத்தை நீங்கள் கீழே காணலாம்:

1. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 கார்புரேட்டட் - ரூ.94 ஆயிரம்

2. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ப்யூயல் இன்ஜெக்ஸன் - ரூ.1.05 லட்சம்

3. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி - ரூ.97 ஆயிரம்.

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான அட்வென்ஜர் பைக் என்ற பெருமை ராயல் என்பீல்டு ஹிமாலயனையே (Royal Enfield Himalayan) சாரும். ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை சுமார் 1.80 லட்ச ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

ஆனால் ராயல் என்பீல்டு ஹிமாலயனை காட்டிலும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பல மடங்கு மலிவான விலையில் கிடைக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் உருவெடுத்துள்ளது.

மிக மலிவான விலையில் புதிய ஹீரோ பைக் அறிமுகம்... எவ்வளவு என தெரிந்தால் உடனே வாங்கி விடுவீர்கள்

இதனிடையே புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S) என்ற மாடலையும் ஹீரோ நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 98,500 ரூபாய். இதுவும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலை காட்டிலும் புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் விலை சுமார் ரூ.8 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 1, 2019, 17:15 [IST]
English summary
Hero XPulse 200 VS Royal Enfield Himalayan: Price Comparison. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+