மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு மாடல் பைக்குகளை இத்தாலியில் நடைபெற்று வரும் ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த வகையில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடுத்த தலைமுறை மாடலான எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் பைக்கையும் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட், தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகி வரும் முந்தைய மாடல் பைக்கை விட முற்றிலும் மாறுபட்ட டிசைனில் காட்சியளிக்கிறது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை விட கவர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் மற்றும் இளைஞர்களை மிகவும் கவரும் விதமாகவும் உள்ளது.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

தொழிற்நுட்ப அம்சங்களில், எல்இடி ஹெட்லைட்ஸ், பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க், உறுதியான ரைடிங் நிலைபாடு மற்றும் எல்இடி டெயில் லைட்ஸ் போன்றவை இந்த எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் சில டிசைனிற்கான பாகங்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த பைக்கை விட டிசைனில் சிறிது மாறுபடும் என கூறப்படுகிறது.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

தற்போதைய மாடலில் உள்ள சேசிஸ் தான் இந்த புதிய பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நேர்த்தியான ரைடிங் டைனமிக்ஸ் மற்றும் ஹேண்டிலிங் போன்றவை அனைத்தும் புதியதாக எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் பைக்கில் இன்னும் சிறப்பாக உள்ளன.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

அதேபோல் இந்த எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் பைக், பெரிய அளவிலான ஃபோர்க்ஸை முன்புறத்திலும் பின்புறத்தில் பெரிய டிஸ்க் ப்ரேக்குகளையும் கொண்டுள்ளது. டயர்களும் மென்மையாக பிளவுகள் இல்லாமல் உள்ளது. ஆனால் இந்த ஃபோர்க்ஸ், டிஸ்க், டயர் அமைப்புகள் எல்லாம் விற்பனைக்கு வரும் பைக்குகளில் இருக்க வாய்ப்புகள் குறைவே.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

சிவப்பு நிற பெயிண்ட் அமைப்புடன் எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட்டின் உடல் அமைப்புகள் பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாக உள்ளன. ஹேண்டில்பார் ஒரே துண்டாக கார்பன்-ஃபைப்ரிக்கால் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிறங்கள் ப்ரேக் மற்றும் க்ளட்ச்களிலும், என்ஜினிற்கு பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள தகடுகளின் பார்டர்களிலும் மற்றும் மேலும் சில இடங்களிலும் கவர்ச்சிகரமான தோற்றத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

இவற்றை தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் பைக்கின் மற்ற தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இந்த வெளிப்புற தோற்றங்கள் அனைத்தும் கண்காட்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளதால், விற்பனைக்கு வரும் பைக் எவ்வாறு இருக்கும் என்பதை காண வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

என்ஜினின் ஆற்றல் நிச்சயமாக தற்போதைய எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலை விட சிறிய அளவாவது அதிகமாகவும் அப்டேட்டாகவும் இருக்கும். இந்த கான்செப்ட் பைக்கின் என்ஜின் குறித்த தகவல்கள் அறிமுகத்தின் போது தான் வெளியாகும் என தெரிகிறது.

மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குகளுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் முழு தயாரிப்பையும் நிறைவு செய்ய இன்னும் அதிக காலங்கள் ஆகலாம். இந்த பைக் குறித்த சில தகவல்களையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளதால், பைக்கை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள முடியவில்லை. முழு தயாரிப்பையும் முடிந்து கொண்டு ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் 2020 இறுதியில் தான் அறிமுகமாகும் என்றே தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2019, 17:04 [IST]
English summary
EICMA 2019: Hero Xtreme 1.R Concept Showcased Previewing The Next-Generation Xtreme 200R
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+