மிக பிரபலமான பைக்கின் விலையை திடீரென உயர்த்திய ஹீரோ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...
மிக பிரபலமான மோட்டார் சைக்கிளின் விலையை ஹீரோ நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200ஆர் (Hero Xtreme 200R) மோட்டார் சைக்கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், 199.6 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 18.4 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும் சக்தி வாய்ந்தது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்படுகிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (TVS Apache RTR 200 4V) உள்ளிட்ட மோட்டார் சைக்கிள் மாடல்களுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மலிவான 200 சிசி மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் திகழ்ந்து வருகிறது.

ஆரஞ்ச் உடனான ஹெவி க்ரே, ஃபோர்ஸ் சில்வர் உடனான பாந்தர் ப்ளாக், டெக்னோ ப்ளூ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் உடனான ப்ளாக் ஆகிய 5 வண்ணங்களில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிள் கிடைக்கிறது. இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டருக்கு 39.9 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது.

இந்தியாவில் தற்போது விற்பனையாகும் ஒரு சில 200 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களே இதை காட்டிலும் குறைவான மைலேஜைதான் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் மலிவான விலையில் ஏறக்குறைய சகல அம்சங்களும் கிடைக்கும் மோட்டார் சைக்கிளாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை குறிப்பிடலாம்.

இந்த சூழலில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளின் விலை 1,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதன் விலை 90,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் எக்ஸ் ஷோரூம் விலை நகரங்களுக்கு நகரம், மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடலாம். எனவே துல்லியமான விலையை தெரிந்து கொள்ள உங்கள் அருகே உள்ள ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப்பை அணுகுங்கள்.


Click it and Unblock the Notifications








