மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர்! தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர் மோட்டார் சைக்கிள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர்! தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர் (Hero Xtreme 200R) மோட்டார் சைக்கிள் இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் 200 சிசி மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்தியாவில் தற்போது 1 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (TVS Apache RTR 200) மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) ஆகிய மோட்டார் சைக்கிள்களுடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர் நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர் பைக் குறித்த தகவல்களை இனி பார்க்கலாம்.

மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர்! தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

இன்ஜின்:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில், புதிதாக உருவாக்கப்பட்ட 199.6 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6,500 ஆர்பிஎம்மில் 17.1 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. நல்ல டார்க்கை வழங்கும் இந்த இன்ஜின் சிட்டி டிராபிக்கில் ஓட்டும்போதும், மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்யும்போதும் ரைடருக்கு உதவி செய்யும். இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர்! தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

வசதிகள்:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்ஸை இது பெற்றுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரானது, வேகம், எரிபொருள் அளவு, நேரம் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை வழங்குகிறது.

மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர்! தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

மைலேஜ்:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ஒரு லிட்டருக்கு 39.9 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு சில 200 சிசி மோட்டார் சைக்கிள்களில் இவ்வளவு மைலேஜ் கிடைப்பது சந்தேகமே. அவ்வளவு ஏன்? ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார் சைக்கிளை காட்டிலும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட சில பைக்குகளே இவ்வளவு மைலேஜை வழங்குவதில்லை.

மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர்! தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

சிங்கிள் சேனல் ஏபிஎஸ்:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் சிங்கிள் சேனல் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை (ABS - Anti-lock braking system) ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது. இதன் நெருக்கமான போட்டியாளரான பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கிலும் கூட சிங்கிள் சேனல் ஏபிஎஸ் யூனிட் மட்டுமே வழங்கப்படுகிறது.

மலிவான விலையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம்200ஆர்! தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்...

கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல்:

ஏற்கனவே சொன்னது போல மலிவான விலையில் ஏறக்குறைய அனைத்து வசதிகளையும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் வழங்குகிறது. 89,900 ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் கிடைக்கிறது. இதன் போட்டியாளரான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (ஏபிஎஸ் உடன்) விலை சுமார் 1.10 லட்ச ரூபாய். அதே சமயம் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கின் விலை சுமார் 1.12 லட்ச ரூபாய். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 6, 2019, 17:57 [IST]
English summary
Top 5 Things Of Hero Xtreme 200R. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+