விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக ஹீரோ நிறுவனத்தன் எக்ஸ்ட்ரீம் பைக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

கனவு கன்னியைப் போன்று, பல இளைஞர்களின் கனவு பைக்காக சுஸுகி நிறுவனத்தின் ஹயபுசா பைக் இருந்து வருகின்றது. அந்தவகையில், ஹயபுசா பைக்கை கனவு வாகனமாக நினைத்து வந்த இளைஞர் ஒருவர், தனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் மூலம், அதனை நிவர்த்தி செய்துகொண்டுள்ளார். அது எப்படி என தானே கேட்கிறீர்கள்... இதுகுறித்த விரிவான தகவலை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

தலைநகர் டெல்லியைச் சேர்ந்த இளைஞர்தான் இந்த சுவாரஷ்யமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மேலும், இந்த பைக்கை எக்ஸ்ட்ரீம் பைக்கிலிருந்து, சுஸுகி ஹயபுசாவாக மாடிஃபை செய்யும் பணியை பிரபல ஜிஎம் கஸ்டம்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முயற்சியால், எக்ஸ்ட்ரீம் பைக் பார்ப்பதற்கு அச்சு அசல் ஹயபுசா பைக்கைப் போன்ற காட்சியை அளிக்கின்றது.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

அந்தவகையில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் பெட்ரோல் டெங்க், முகப்பு பகுதி, முன் பக்க ஃபென்டர், ரியர் பகுதி என பைக்கின் அனைத்து பாகங்களும் நீக்கப்பட்டு, ஹயபுசா பைக்கின் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பைக்கின் சைலென்சர், டயர் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மிகப்பெரிய அளவிலான மாற்றத்தால், எக்ஸ்ட்ரீம் பைக் மிகவும் அழகான ஹயபுசா பைக்காக மாறியுள்ளது.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

தொடர்ந்து, சிறு அளவில் கூட எக்ஸ்ட்ரீம் பைக், அதன் உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு, ஹயபுசா பைக்கில் இருப்பதைப்போன்று, முன்பக்க வீலில் இரண்டு டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ஒன்று வேலை செய்கிறதா என்று தகவல் கிடைக்கவில்லை.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

சுஸுகி நிறுவனம், ஹயுபுசா பைக்கின் உற்பத்தியை பல்வேறு காரணங்களால், கடந்த ஆண்டே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, புதிதாக களமிறங்க இருக்கும் மாசு உமிழ்வு விதிகளே காரணமாக இருக்கின்றது. இந்த பைக்கில், 1,340 சிசி திறனை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

அது 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஹயபுசா பைக்கில் மூன்று விதமான டிரைவிங் மோடுகளில் வழங்கப்பட்டுள்ளன. இது, பைக்கருக்கு சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும்.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

இதேபோன்று, ஹயுபுசா பைக்காக மாறியுள்ள ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் பைக், தற்போது புதிய அவதாரம் கொண்ட மாடலாக களமிறங்கியுள்ளது. அவ்வாறு, தற்போது களமிறங்கியுள்ள எக்ஸ்ட்ரீம் பைக் மிக அழகான மாடலான விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அது தற்போது எக்ஸ்ட்ரீம் 200எஸ் என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...!

இந்த பைக்கில், 199.6 சிசி திறன் கொண்ட, ஏர் கூல்ட், 4 ஸ்ட்ரோக், 2 வால்வ், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 18.4 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 17.1என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

Source: maxabout

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2019, 18:58 [IST]
English summary
This Hayabusa Is An Xtreme Modification Done The Proper Way. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+