வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

பிப்ரவரி மாதத்தில், யமஹா நிறுவனம் வெறும் 20 ஆர்3 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த திணறலுக்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

பெர்ஃபார்மென்ஸ் ரக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வரும் யமஹா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்று ஆர்3 (Yamaha R3). புகழ்பெற்ற மாடல்தான் என்றாலும், கடந்த பிப்ரவரி மாதத்தில், வெறும் 20 ஆர்3 பைக்குகளை மட்டுமே யமஹா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மிடில்வெயிட் யமஹா ரேஸரான ஆர்3 மீது கவாஸாகி நின்ஜா 300 (Kawasaki Ninja 300) பைக்கின் தாக்கம் இருப்பதை இது தெளிவாக காட்டுகிறது.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

யமஹா ஆர்3 பைக்கின் விலைதான், வாடிக்கையாளர்களை வேறு 'ஆப்ஷன்' நோக்கி திருப்புகிறது. இந்தியாவில் யமஹா ஆர்3 பைக்கின் விலை 3.49 லட்ச ரூபாய். அதே சமயம் கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை வெறும் 2.98 லட்ச ரூபாய்தான். யமஹா ஆர்3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 ஆகிய இரண்டு பைக்குகளுக்கும் இடையே விலையில் உள்ள வித்தியாசம் 51 ஆயிரம் ரூபாய்.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

இந்திய வாடிக்கையாளர்களை பொறுத்தவரை 51 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய விஷயம். அதேசமயம் கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) பைக்கானது வெறும் 2.41 லட்ச ரூபாய்க்கே கிடைக்கிறது. யமஹா ஆர்3 பைக்குடன் ஒப்பிடுகையில் கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் விலை 1.08 லட்ச ரூபாய் குறைவு. எனவே யமஹா ஆர்3 பைக்கிற்கு பதிலாக கவாஸாகி நின்ஜா 300 பைக்கை தேர்வு செய்தால் 51 ஆயிரம் ரூபாயையும், கேடிஎம் ஆர்சி 390 பைக்கை தேர்வு செய்தால், 1.08 லட்ச ரூபாயையும் மிச்சம் பிடிக்க முடியும்.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

அதேசமயம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 (TVS Apache RR 310) பைக்கின் விலை இதை விட மலிவானது. ஃபுல் ஃபேர்டு (Full Faired), 300 சிசி ப்ளஸ் மோட்டார் சைக்கிள்கள் மத்தியில், மிகப்பெரிய விலை வித்தியாசம் யமஹா ஆர்3 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 ஆகியவற்றுக்கு இடையேதான் வருகிறது.

தற்போதைய நிலையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கானது, கேரளாவில் 1.99 லட்ச ரூபாய்க்கும், டெல்லியில் 2.23 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கிறது.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

யமஹா ஆர்3 பைக்கிற்கு மாற்றாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை தேர்ந்து எடுத்தால், கேரளாவில் உள்ள வாடிக்கையாளர் 1.50 லட்ச ரூபாயையும், டெல்லியில் உள்ள வாடிக்கையாளர் 1.26 லட்ச ரூபாயையும் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து மிச்சப்படுத்தலாம். பொதுவாக இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

பட்ஜெட் விலையில் கிடைக்கும் தயாரிப்புகளே பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். பெர்ஃபார்மென்ஸ், இன்ஜின் தரம் ஆகியவை இங்கு இரண்டாம் பட்சமாகதான் உள்ளது. இந்திய மார்க்கெட்டில் யமஹா ஆர்3 மோட்டார் சைக்கிளின் திணறலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

யமஹா ஆர்3 பைக்கில், 321 சிசி, டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 42 எச்பி பவர் மற்றும் 29.6 என்எம் டார்க் திறனை உருவாக்கி சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

வெறும் 20 பைக்குகள் மட்டுமே விற்பனை... இந்திய மார்க்கெட்டில் யமஹாவின் திணறலுக்கு காரணம் இதுதான்...

இந்த சூழலில் எதிர்வரவுள்ள 2019 ஆர்3 டிசைன், சேல்ஸ் நம்பர்களை அதிகரிக்க யமஹா நிறுவனத்திற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறையும் விலை நிர்ணயம் தவறாக இருந்தால், கவாஸாகி நிறுவனம் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்காது. யமஹா ஆர்3 மீது மட்டுமல்லாது இந்த செக்மெண்ட்டில் சாத்தியமுள்ள அனைத்து போட்டி நிறுவனங்களின் பைக்குகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கவாஸாகி நின்ஜா 300 மோட்டார் சைக்கிளின் விற்பனை எண்ணிக்கை 135.

(குறிப்பு: இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்)

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2019, 12:28 [IST]
English summary
High Price Tag: Only 20 Units Of Yamaha R3 Sold In February 2019. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+