புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் தோற்றத்தில் கூடுதல் பொலிவுடன் பிஎஸ்-6 எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இருசக்கர வாகனமாக ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124 சிசி கார்புரேட்டர் எஞ்சினுக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷனில் இயங்கும் 124 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பழைய கார்புரேட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஆனால், புதிய ஆக்டிவா 125 எஞ்சின் 8.1 பிஎச்பி பவரை மட்டுமே வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக வந்துள்ளது. எனினும், பழைய மாடலைவிட 13 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் திறனுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டிவா ஸ்கூட்டரின் எஞ்சினின் உள்புற பாகங்கள் உராய்வுகள் குறைவாக இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

மேலும், புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சப்தம் இல்லாமல் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் புதிய ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் மிக முக்கியமான தொழில்நுட்ப சிறப்பாக இது பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

எஞ்சின் தொழில்நுட்ப சிறப்புகளுடன் மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன் இதர கூடுதல் சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட், பொசிஷன் விளக்குகள், புதிய டிசைனிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. ரிமோட் முறையில் இருக்கை மற்றும் எரிபொருள் தொட்டி மூடியை திறப்பதற்கான வசதிகளுடன் மல்டி பங்ஷன் இக்னிஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இடம்பெற்றுள்ளது. அனலாக் டயல் மற்றும் டிஜிட்டல் பேனலுடன் பல்வேறு கூடுதல் தகவல்களை வழங்கும் விதத்தில் வந்துள்ளது முக்கிய சிறப்பு.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் கார்களில் இருப்போது போன்று நிகழ்நேர எரிபொருள் செலவு, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை பெற முடியும். அத்துடன், சைடு ஸ்டான்டு போடப்பட்டு இருந்தால், எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத வகையிலான புதிய தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ரூ.67,490 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சுஸுகி அக்செஸ் 125, வெஸ்பா 125 ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2019, 13:44 [IST]
English summary
Honda Motorcycles and Scooters India (HMSI) has launched the country's first BS-VI compliant two-wheelers in the country, with their popular Activa 125 offering. The new Honda Activa 125 BS6 is priced at Rs 67,490, ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+