நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை கூடிய விரைவில் விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றிய சிறப்பு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹோண்டா நிறுவனம், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனம் விற்பனைச் செய்யும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

இந்த நிலையில், ஆக்டிவா ஸ்கூட்டரின் புதிய மாடலான ஆக்டிவா 6ஜி-யை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக காடிவாடி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோண்டாவின் புதிய மாடல் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இந்தியாவில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்த செய்திகளும், புகைப்படங்களும் ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில், இந்த ஸ்கூட்டரை வருகின்ற திருவிழாக் காலங்களில் விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

ஹோண்ட நிறுவனம் மூலம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில், ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹோண்ட நிறுவனம் அதன் புதிய ஆக்டிவா 6ஜி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அவ்வாறு, சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த புதிய மாடல் ஸ்கூட்டர் சற்று உயர்த்தப்பட்ட விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

மேலும், இந்த புதிய மாடல் ஸ்கூட்டர் ஆக்டிவாவிற்கே உரித்தான தோற்றத்தையும், தீமையும் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சில மாற்றங்களாக ட்வீக்கட் எல்இடி ஹெட்லைட் மின்விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, புதிய 6ஜி மாடலின் பாடியில் ஓர் சில மாற்றத்தை ஹோண்டா செய்துள்ளது. இந்த மாற்றத்தால் புதிய ஆக்டிவா 6ஜி பழைய மாடலைக் காட்டிலும் சற்று மாறுதலாக காணப்படும்.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி-யில் புதிய மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. அனலாக் ஸ்பீடோ மீட்டருக்கு பதிலாக புதிய கிராஃபிக் தொழில்நுட்பத்தைக் கொண்ட டிஜிட்டல் டிஸ்பிளேவாக இது இருக்கும். இது, ஸ்கூட்டரின் வேகம், பெட்ரோல் அளவு உள்ளிட்ட தகவலை வழங்கும். இந்த புதிய ஸ்கூட்டரில் சீட்டைப் பொருத்தவரை எந்தவொரு மாற்றமும் இருக்காது எனக் கூறப்படுகிறது. ஆனால், இதன் முன் பக்கம் மற்றும் பின்பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

இதைத்தொடர்ந்து, ஹோண்டா ஆக்டிவா 6ஜி-இல் மிகப்பெரிய மாற்றமாக டெலிஸ்கோபிக் போர்க்குகள் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனைக் காட்டிலும் மிகச்சிறந்த பயண அனுபவத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கும். இதேபோன்று, இந்த ஆக்டிவா 6ஜி-யின் டாப்-ஸ்பெக் மாடலில் கருப்பு நிறம் தீட்டப்பட்ட அல்லாய் வீல்கள் பயன்படுத்த இருக்கின்றன. இது ஆக்டிவாவிற்கு புதிய லுக்கை வழங்கும்.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

இதையடுத்து, 10இன்ச் கொண்ட ட்யூப்லெஸ் டயர் இந்த ஸ்கூட்டரின் வீல்களில் கொடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் டிஸ்க்பிரேக்குகளும் இணைக்கப்பட உள்ளது. மேலும், இதில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் ஹோண்டா... ஆக்டிவா 6ஜி வெளியீடு குறித்த சிறப்பு தகவல்...!

ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் தற்போதைய ஆக்டிவா மாடலின் எஞ்ஜின்களே பொருத்தப்பட உள்ளன. அந்த வகையில், 109சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்படும். இது 8 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 9எம்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்-இல் வழங்கும். இந்த எஞ்ஜினானது, ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஸனில் இயங்கும். ஆகையால், இதன் மைலேஜில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்பது தெரியவருகிறது. இந்த புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் உடன் போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2019, 18:15 [IST]
English summary
Honda Activa 6G India Launch Soon. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+