விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

ஹோண்டா ஆக்டிவா தனது விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அவ்வாறு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வரை 2 லட்சத்தது 13 ஆயிரத்து 302 ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து உச்சத்தில் உள்ளது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா. ஆண்கள் மற்றும் பெண் என இரு பாலருக்கும் பிடித்தமான இந்த ஸ்கூட்டர் இந்திய ஸ்கூட்டர் சந்தையை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஸ்கூட்டர், அதன் மார்கெட்டை விட்டுக் கொடுக்காமல் கடந்த சில வருடங்களாகவே அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

ஆக்டிவா ஸ்கூட்டரின் நீடித்த உழைப்பும், அதிக மைலேஜும் தான் இந்த ஸ்கூட்டரை அனைவரும் ஏற்க கராணமாக உள்ளது. தொடர்ந்து, சில வருடங்களாக விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஹோண்டா ஆக்டிவா இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, இந்த ஸ்கூட்டர், கடந்த ஜனவரி மாதம் வரை 2 லட்சத்தது 13 ஆயிரத்து 302 ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து, ஸ்கூட்டர் சந்தையின் உச்சத்தில் உள்ளது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

ஹோண்டா ஆக்டிவாவுக்கு போட்டியாக பல ஸ்கூட்டர்கள் களமிறக்கப்பட்டாளும், இதன் விற்பனையில் துளியளவும் மாற்றமில்லாமல் கொடிக்கட்டிப் பறந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இது கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் சற்று விற்பனை சற்று சரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹோண்டா ஆக்டிவா 2 லட்சத்து 43 ஆயிரத்து 826 பைக்குகள் விற்றது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

இவ்வாறு, ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட பல நிறுவனங்கள், தங்களது புதிய ஸ்கூட்டர்களை சந்தையில் களமிறக்கின. ஆனால், அவை குறைந்தபட்ச இடத்தை மட்டுமே பிடித்தன. இதன்பட்டியல் வரிசையை இந்த பதிவில் பார்ப்போம்.

Scooter Jan-19
1 Honda Activa 2,13,302
2 Suzuki Access 54,524
3 TVS Jupiter 51,300
4 Honda Dio 46,854
5 Hero Destini 21,352
6 TVS Ntorq 15,836
7 Hero Pleasure 12,892
8 Yamaha Fascino 12,493
9 Hero Maestro 11,803
10 TVS Scooty Pep+ 9,114

MOST READ: சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

2. சுஸுகி அக்செஸ்

இந்தியாவின் 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சுஸுகி அக்செஸ் மிகச் சிறந்த தேர்வாக முன்னிலை வகிக்கிறது. ஹோண்டாவின் ஆக்டிவாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக சுஸுகி நிறுவனம், ஆக்செஸ் ஸ்கூட்டரில், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலையும், ஸ்பெஷல் எடிசன் அக்செஸ் 125 ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்தது. லெதர் சீட், அலாய் வீல் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு களமிறக்கியது. மேலும், இந்த ஸ்கூட்டரில் 124 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும்.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

சுஸுகி நிறுவனத்தின் இந்த ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் விற்பனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் 54 ஆயிரத்து 524 பைக்குகளை விற்று இந்த இடத்தைப் பிடித்துள்ளது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

3. டிவிஎஸ் ஜூபிடர்

தமிழ்நாட்டில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஜூபிடரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்கூட்டர் கடந்த ஜனவரி மாதம் வரை 51 ஆயிரத்து 300 யூனிட் ஸ்கூட்டர்களை விற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

4. ஹோண்டா டியோ

ஹோண்டா நிறுவனம் அதன் மற்றுமொரு தயாரிப்பான டியோ ஸ்கூட்டரை வெளியிட்டது. இதில், 109.19 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 பிஎச் பவரை வெளிப்படுத்தும். மேலும், டியோவின் எஞ்ஜின் சிறந்த உழைப்பு மற்றும் பெர்பாமென்ஸை தருகிறது.

இதன் அட்டகாசமான ஸ்டைல் அதிகப்படியான இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துள்ளது. அவ்வாறு, இந்த ஸ்கூட்டர் கடந்த ஜனவரி மாதம் வரை 46 ஆயிரத்து 854 ஸ்கூட்டர்களை விற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

MOST READ: ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

5. ஹீரோ டெஸ்டினி

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனத்தை வீழ்த்தும் விதமாக பல புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அதனடிப்படையில், 125சிசி கொண்ட டெஸ்ட்டினி 125 என்ற புதிய மாடலை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் கடந்த ஜனவரி மாதம் விற்பனையில் 21 ஆயிரத்து 352 ஸ்கூட்டர்களை விற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

6. டிவிஎஸ் என்டார்க்

டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான என்டார்க் 125 ஸ்கூட்டர், ஸ்டைல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலைக்கேற்ப, இதன் பெர்பாமென்ஸும் அதிகம். இதில் 124.79 சிசி திறன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9.4 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

இந்த ஸ்கூட்டர், கடந்த ஜனவரி மாதம் வரை 15 ஆயிரத்து 836 ஸ்கூட்டர்களை விற்று ஆறாவது இடத்தில் உள்ளது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

7. ஹீரோ பிளஸ்ஸர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான பிளஷர் ஸ்கூட்டர் சற்று லைட் வெயிட்டாக பெண்களுக்கு ஓட்டுவதுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 102சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6.91பிஎச்பி பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஹீரோ மோட்டோகார்ப்-இன் பிளஷர் ஸ்கூட்டர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 12 ஆயிரத்து 892 ஸ்கூட்டர்களை விற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

8. யமஹா ஃபஸினோ

யமஹா நிறுவனம் இளைஞர்களை கவரும் வகையில் வாகனங்களைத் தயாரித்து வருகிறது. அதன்படி, இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவ்வாறு, யமஹா நிறுவனம் அறிமுகம் செய்த ஃபஸினோ ஸ்கூட்டர், ஆண்கள் பெண்கள் என இரு பாலரையும் கவர்ந்து இழுத்தது.

MOST READ: 5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

இந்த ஸ்கூட்டர் கடந்த 2018ம் ஆண்டைக்காட்டிலும் 11 சதவீதம் விற்பனைக் குறைந்து 8 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 12 ஆயிரத்து 493 ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 சதவீதம் குறைவாகும்.

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

9. ஹூரோ மேஸ்ட்ரோ

ஹூரோ நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பு இந்த வரிசையில் மூன்று இடத்தைப் பிடித்துள்ளது. அவ்வாறு அதன் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியைக் காட்டிலும் சற்று குறைவான அளவே ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்துள்ளது. அவ்வாறு இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 11 ஆயிரத்து 803 ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்துள்ளது.

MOST READ: மெட்ரோ ரயில் நிலையங்களை கலக்க வரும் வாடகை ஸ்கூட்டர் திட்டம்: வாடகை தொகை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா!!!

10 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ்

டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் ஸ்கூட்டி பெப் பிளஸ். இது அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்பகாலத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர் என்ற பெருமையைப் பெற்றது. மேலும், ஒரு காலத்தில் இந்த ஸ்கூட்டர்களில் தான் சாலையை பெரும்பாலும் ஆண்டுக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது மற்ற போட்டி வாகனங்களால் அதன் விற்பனை சற்று பின்வாங்கியுள்ளது.

அவ்வாறு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 9 ஆயிரத்து 114 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 சதவிகிதம் சரிவாகும்.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Honda Activa Maintains Lead In Sales. Read In Tamil.
Story first published: Thursday, February 21, 2019, 18:41 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more