தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனம், அதன் பிரபல 125சிசி பைக்கிற்கு சலுகையை வாரி வழங்குகின்ற வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் 125 மாடல் பைக் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இது, ஹோண்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளிலும் ஒன்றும்கூட.

ஆகையால், அந்நிறுவனம் ஷைன் 125 மாடலில் லிமிடெட் எடிசனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

இந்நிலையில், இந்த பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, அதன் விளம்பரத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ, 125சிசி பைக்க பிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

இத்துடன், இந்த பைக்கிற்கு சில குறிப்பிட்ட சலுகைகளையும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில், ஓர் இளம் பெண்ணிடம் எப்படி இளைஞன் மயங்கி வர்ணிப்பானே அதேபோன்று, ஓர் விதமான மயக்கத்துடன் ஹோண்டா சிபி ஷைன் பைக்கை மஞ்சள் நிற உடையணிந்த வாலிபர் வர்ணிக்கிறார்.

இதைத்தொடர்ந்து, விளம்பரத்தின் முடிவில் பைக்கின் கூடுதல் மற்றும் சிறப்பு சலுகை குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனம், சிபி ஷைன் 125 பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, இந்த சலுகையை வழங்க இருக்கின்றது. அந்தவகையில், மிகப்பெரிய தள்ளுபடியாக ரூ. 9,100 என்ற தொகையை தள்ளுபடி செய்ய உள்ளது. இதில், ரூ. 2,100-னை ஹோண்டா ஜாய் கிளப் வாயிலாகவும், ரூ. 7 ஆயிரத்தை பேடிஎம் வாயிலாகவும் அது வழங்க உள்ளது. முன்னதாக இந்த பைக்கின் விலையில் ரூ. 300ஐ ஹோண்டா உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

ஹோண்டா சிபி ஷைன் பைக் கடந்த ஜுலை மாத விற்பனையின்படி 94,599 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருந்தது. இது 2018ம் ஆண்டு ஜுலை மாதத்தைக் காட்டிலும் 9.75 சதவீதம் அதிக விற்பனையாகும்.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

ஆகையால், இந்த பைக் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம், லிமிடெட் எடிசனில் அறிமுகம் செய்துள்ள சிபி ஷைன் பைக்கில், கணிசமான காஸ்மெடிக் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

அதன்படி புதிய வண்ணம், கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்டைலில் இந்த லிமிடெட் எடிசன் சிபி ஷைன் 125 காட்சியளிக்கின்றது.

இந்த பைக்கின் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ. 59,083 என்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. அதேபோன்று, இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 63,743 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது, ஸ்டாண்டர்டு வேரியண்டைக் காட்டிலும் ரூ. 300 அதிக விலையைக் கொண்டதாக உள்ளது.

காஸ்மெட்டிக் மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் இந்த பைக்கில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால், இதன் ஸ்டாண்டர்டு வேரியண்டில் காணப்படும் அதே எஞ்ஜின் திறன்தான், இதிலும் காணப்படுகின்றது.

தள்ளுபடி, கேஷ்பேக் சலுகையை வாரி வழங்கும் ஹோண்டா... எந்த பைக்கிற்கு தெரியுமா...?

அந்தவகையில், ஹோண்டா சிபி ஷைன் 125 பைக்கில் 125சிசி வெளிப்படுத்தும் ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 10.16 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இதில், 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2019, 17:39 [IST]
English summary
Honda Announced Discount, Cashback For CB Shine Limited Edition - Video. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+