ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகன விற்பனையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும் விதத்தில், வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு நிகரான தரமுடைய எஞ்சினுடன் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் கார், பைக் நிறுவனங்கள் முதல் கனரக வாகன நிறுவனங்கள் வரை தீவிரம் காட்டி வருகின்றன.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே பிஎஸ்-6 எஞ்சினுடன் கார், பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன. அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களிலும் பிஎஸ்-6 எஞ்சினை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டன.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

இந்த வாகனங்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதாவது, இதுவரை 60,000 பிஎஸ்-6 தரமுடைய ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி-125 டூ வீலர்களை விற்பனை செய்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

இதுகுறித்து ஹோண்டா விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை மூத்த துணைத் தலைவர் யத்வீர் சிங் குலேரியா கூறுகையில்," ஹோண்டா மீது நம்பிக்கை வைத்திருக்கும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். குறிப்பாக, பிஎஸ்-6 யுகத்திற்கு மாறுவதற்கு ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

ஹோண்டாவின் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் எங்களது ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 வாகனங்கள் அமைதி புரட்சியை துவங்கி இருக்கின்றன.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

ஏஜிஎஸ் ஸ்டார்ட்டர் மோட்டார், ஸ்மார்ட் பவர் ஆகிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனம், 6 ஆண்டுகள் வாரண்டி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான உணர்வை வழங்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வருவதற்கு காலாண்டு காலத்திற்கு முன்னரே விற்பனையில் 60,000 எட்டியிருப்பது நிச்சயம் புதிய மைல்கல்லாக கருத முடியும்.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

இந்தியா முழுவதும் இன்னும் முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படாத நிலையிலேயே, இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது ஹோண்டா மீது வாடிக்கையாளர்களுக்கான நம்பிக்கையை பரைசாற்றுவதாகவே கருத முடியும்," என்று தெரிவித்தார்.

ஹோண்டா பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த மாடலுக்கு ரூ.67,490 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, எஸ்பி 125 பிஎஸ் பைக்கிற்கு ரூ.72,900 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், பாஸ் லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2019, 10:43 [IST]
English summary
HMSI (Honda Motorcycle & Scooters India) has announced the achievement of a new landmark in the country, in terms of sales. The company announced that their two BS6 product offerings in the country have crossed 60,000 units in sales.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+