விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

பைக் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா அதன் புத்தம் புதிய மாடலான சிபி300ஆர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் கடந்த 2017ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. அப்போது பைக் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது 'நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே' என்ற கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. ரம்மியமான தோற்றத்துடன் இருந்த அந்த பைக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

ஹோண்டா சிபி300ஆர் பைக்கானது 286சிசி, சிங்கிள் சிலிண்டர், டி.ஓ.எச்.சி., கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 31.4 குதிரை சக்தியையும், 27.5 என்எம் டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜினில் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 30.2 கி.மீ., மைலேஜினை கொடுக்கும்.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

இந்த பிரத்யேகமான புத்தம் புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் எல்இடி விளக்குகள் கொண்ட வட்ட வடிவிலான ஹெட்லைட் பொருத்தப்பட்டு உள்ளது. குதிரை குளம்பு வடிவிலான கெய்டு லைட்டுகளும் ஹெட்லைட்டில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இன்டிகேட்டர்களும் எல்இடி மின்விளக்குகளால் நிறுவப்பட்டுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

இதைத்தொடர்ந்து ஹோண்டா சிபி300ஆர் பைக் டியூபியூலர் மற்றும் அழுத்தப்பட்ட ஸ்டீல் ஃப்ரேமினால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கில் 41மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

மேலும், இந்த பைக்கில் சிறந்த பாதுகாப்பு அம்சமாக இரண்டு வீல்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக்கும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் நிறுவப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு துணை நிற்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

இதையடுத்து, பைக்கின் நிலைத்தன்மை குறித்து அளவிட்டு கூறும் ஐஎம்யூ என்ற சாதனமும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸட்டரும் இதில் இடம்பெற்றுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட புத்தம்புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கானது கிரே மற்றும் ரெட் ஆகிய இரு வண்ணங்களில் சந்தையை களக்கத் தயாராகி வருகிறது. முக்கியமாக இதன் உதிரிபாகங்கள் ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்பட உள்ளன.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

இந்த பைக்கானது எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ரூ. 5 ஆயிரத்துடன் இந்த பைக்கின் முன்பதிவானது துவங்கப்பட்டது. இந்நிலையில், ஹோண்டா சிபி300ஆரின் அறிமுகத் தேதியினை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

அதன்படி, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் இந்த பைக் டெலிவரி செய்யப்படும் என டீலர்கள் சார்பில் கூறப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய மாடல்!

இந்த புத்தம் புதிய ஹோண்டா சிபி300ஆர் சந்தையில் வெளிவந்த பின்னர், கேடிஎம் 390 ட்யூக், பஜாஜ் டோமினார் 400 உள்ளிட்ட மாடல்களிடையே கடுமையான போட்டி நிலவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 23, 2019, 11:18 [IST]
English summary
The Honda CB300R motorcycle launched in India on 8th Feb. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+