பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பஜாஜைத் தொடர்ந்து, ஹோண்டா நிறுவனமும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அப்படி என்ன தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஹோண்டா நிறுவனம், அதன் புத்தம் புதிய மாடலான சிபி300ஆர் மாடலின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கை, நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில்தான் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்போது அதற்கு ரூ. 2.41 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த விலையை மாற்றியமைக்கும் விதமாக ரூ.989 உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது இந்த பைக்கின் விலை ரூ. 2,41,989 என்ற புதிய விலையைப் பெற்றிருக்கின்றது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விலையுயர்வைப் பெற்றிருந்தாலும், இந்த பைக் கேடிஎம் 390 ட்யூக் மடாலைக் காட்டிலும் மலிவான விலையிலேயே காட்சியளிக்கின்றது. இது ரூ. 2.48 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஹோண்டா நிறுவனத்தின் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்தவகையில், இதற்கு கிடைத்த புக்கிங்கானது, அந்நிறுவனம் மூன்று மாதங்களுக்கு செய்யும் உற்பத்திக்கு இணையானதாக இருந்தது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அவ்வாறு, புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஹோண்டா சிபி300ஆர் பைக் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், எத்தனை யூனிட்டுகளை இதுவரை அந்நிறுவனம் டெலிவரி செய்துள்ளது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், ஜீன் மாதத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் டெலிவரிக்காக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த எண்ணிக்கை, இந்த செக்மெண்டில் விற்பனையாகி வரும் மற்ற பைக்குகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கின்றது. இந்த, ஹோண்டா சிபிஆர்300ஆர் பைக், அதன் சகோதர மாடலான சிபிஆர்250ஆர் பைக்கைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த பைக், சிபி300ஆர் மடாலைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாக இருக்கின்றது. அவ்வாறு, ரூ. 1.65 - ரூ. 1.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. இந்த விலை, அதில் கிடைக்கும் வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடலாம்.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஹோண்டா சிபி300ஆர் பைக்கை அந்நிறுவனம், சிகேடி (completely knocked down kits) வழியாக இந்தியாவில் களமிறக்கி வருகின்றது. மேலும், இதனை வேர்ல் விங் டீலர்கள் மூலம் விற்பனைச் செய்து வருகின்றது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

குறைவான உற்பத்தியின் காரணமாக, ஹோண்டா நிறுவனம், சிபி300ஆர் பைக்கை உடனடியாக டெலிவரி செய்வதில் சிக்கலைச் சந்தித்து வருகின்றது. இருப்பினும், எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் விதமான முயற்சியை ஹோண்டா மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பைகூட அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேலும், கூடுதல் விற்பனை விகிதத்தைப் பெறும் விதமாக ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் அப்டேட் வெர்ஷனும் கூடிய விரைவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த அப்டேட் மாடலை அந்நிறுவனம், ஏற்கனவே ஜப்பானில் அறிமுகம் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ரெட்ரோ டிசைன் உட்செலுத்தப்பட்ட நேக்கட் தோற்றம் மற்றும் சினேவி புரொஃபைல், ஹோண்டா சிபி300ஆர் பைக்கை எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பைக் ரெட்ரோ ஸ்டலைலில் காணப்பட்டாலும், அதன் சிறப்பம்சங்கள் அனைத்து நவீன யுகத்திற்கு ஏற்பவாறு இருக்கின்றது. ஆகையால், இதன் பெர்ஃபார்மென்ஸும் சரி, தோற்றுமும் சரி எந்த விதத்திலும் குறைவாக அமையவில்லை.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அந்தவகையில், ஹோண்டா சிபி300ஆர் பைக் கேன்டீ குரோமோஸ்பியர் சிவப்பு மற்றும் மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் உள்ளிட்ட இரு வண்ணங்களில் கிடைக்கின்றது. அதேபோன்று, இதன் பிளாக்ட் அவுட் தீம் மிகவும் வெறித்தனமானதாக காட்சியளிக்கின்றது. இந்த தீம், பைக்கின் எஞ்ஜின், பெண்ட் பைப், எக்சாஸ்ட், ஃப்ரேம், சைட் பேனல்கள் மற்றும அலாய் வீல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இத்துடன் பைக்கில் அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில் 286.01 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 27.4 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பஜாஜை தொடர்ந்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஹோண்டா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேலும், சிறப்பான பிரேக்கிங் வசதியாக பைக்கின் முன்பக்கத்தில் 296மிமீ அளவு கொண்ட டிஸ்க்கும், பின்பக்கத்தில் 220மிமீ அளவுகொண்ட டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இந்த பைக்கில் வழங்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2019, 18:20 [IST]
English summary
Honda CB300R price increased. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+