புகழ்பெற்ற பைக்கை கைவிட்டதா ஹோண்டா??..!!

ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் புகழ்பெற்ற சிபிஆர்650எஃப் பைக்கினை அந்நிறுவன இணையத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது பல கேள்விகளை ஹோண்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புகழ்பெற்ற பைக்கை கைவிட்டதா ஹோண்டா??..!!

மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் டெல்லியில் கடந்த 2015ம் ஆண்டு 650 சிசி திறன் கொண்ட ஹோண்டா சிபிஆர்650எஃப் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது. இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த பைக் டெல்லி ஷோரூம் விலையில் 7.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது.

புகழ்பெற்ற பைக்கை கைவிட்டதா ஹோண்டா??..!!

இந்தியாவில் சிபிஆர்650எஃப் பைக்கின் உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படது. மேலும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கும் ஹோண்டாவின் முதல் 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட பைக் மாடலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ளூரில் தயாரான பாகங்களின் அளவு 5 சதவீதம்தான். பிற பாகங்கள் அனைத்தும் ஜப்பான், தாய்லாந்து ஆலையிலிருந்து வரவழைக்கப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டது.

புகழ்பெற்ற பைக்கை கைவிட்டதா ஹோண்டா??..!!

ஓட்டுபவருக்கு மிகச்சிறந்த ரைடிங் பொசிஷனை கொண்ட என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்காக ஹோண்டா சிபிஆர்650எஃப் அறிமுகம் செய்யப்பட்டது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்கள் விரும்புவோருக்கு சரியான தேர்வாக சிபிஆர்650 இருந்து வந்தது. இருவர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டது.

புகழ்பெற்ற பைக்கை கைவிட்டதா ஹோண்டா??..!!

இந்நிலையில் தற்போது சிபிஆர்650எஃப் பைக் முன்னறிவிப்பின்றி ஹோண்டா இனையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பல கேள்விகளை ஹோண்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. சிபிஆர்650எஃப் பைக் முழுமையாக நிறுத்தப்பட்டதா அல்லது மாற்று மாடல் வருகிறதா என சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புகழ்பெற்ற பைக்கை கைவிட்டதா ஹோண்டா??..!!

சிபிஆர்650 வரிசையில் தொழில்நுட்ப இயந்திர மாற்றங்களுடன் சிபிஆர்650ஆர் மோனிக்கர் என்ற பைக்கினை விரைவில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என செய்திகள் வெளியானது. சிபிஆர்650எஃப் பைக்கிற்கு பதிலாக சிபிஆர்650 ஆர் வருகிறதா அல்லது சிபிஆர்650எஃப் தயாரிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டதா என ஹோண்டா நிறுவனம் இதுவரை உறுதியான தகவல் வெளியிடவில்லை.

புகழ்பெற்ற பைக்கை கைவிட்டதா ஹோண்டா??..!!

சிபிஆர்650 பைக்கின் 4 சிலிண்டர் 649சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5.8 பிஎச்பி பவரையும், 63 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்து வெளியிடப்பட்டது. சிபிஆர்650எஃப் பைக் நீக்கப்பட்டது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Honda-CBR650F-Removed-from-Official-Website- Read in Tamil
Story first published: Friday, January 18, 2019, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X