பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

ஹோண்டா நிறுவனம் அதன் சக்தி வாய்ந்த சிபிஆர் 650ஆர் என்ற சக்தி வாய்ந்த பைக்கை விற்பனைக்காக அதன் டீலர்கள் ஷோரூமிற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பைக் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

ஜப்பானை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி புதிய ஸ்போர்ட் பைக்கான சிபிஆர் 650ஆர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக்கினை முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

இதைத்தொடர்ந்தே, இந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த பைக் விற்பனைக்காக அதன் டீலர்களின் ஷோரூம்களை வந்தடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியினை ஆங்கில இணையதளமான ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

ஹோண்டாவின் இந்த மெருகேற்றப்பட்ட புதிய மாடல் சிபிஆர் 650ஆர் பைக், சமீபத்தில் முடக்கப்பட்ட சிபிஆர் 650எஃப் பைக்கை ரீபிளேஸ் செய்யும் விதமாக இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. மிடில் எடைக் கொண்ட இந்த பைக் இரண்டு விதமான வண்ணத் தேர்வில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன் பவுடர் பிளாக் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கும்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

இந்த இரு வண்ணத்திலான பைக்குகளுக்கும் புக்கிங்கள் நடைபெற்று வரும்நிலையில், சிவப்பு நிற பைக்கை புக் செய்தால் டெலிவரிக்காக வருகின்ற செப்டம்பர் மாதம் வரையும், கருப்பு நிற பைக்கிற்கு இம்மாதம் இறுதி வரை காத்திருக்கக்கூடிய சூழல் நிலவி வருவதாக டீலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

மேலும், இந்த பைக்கின் விற்பனைக்காக நாடுமுழுவதும் புதிதாக 22 விங் வேர்ல்டு ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாகவும் இதன் விற்பனை அதிகரிக்க ஹோண்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

இந்த பைக்கின் ஸ்டைல் மற்றும் வடிவம், ஹோண்டா ஃபயர்பிளேடு சூப்பர் பைக்கை ஒத்ததாக இருக்கின்றது. இருப்பினும், அந்த பைக்கைக் காட்டிலும் சற்று மாறுதலாக காணப்படும் வகையில் சிபிஆர் 650ஆர் பைக்கில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, எல்இடி ஹெட்லைட்டு, ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் மாறுபட்ட இருக்கை அமைப்பு உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக காண்படுகின்றது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

இத்துடன், இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச், டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் வீல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், பைக்கின் முன்புறத்தில் ஷோவா 41mm அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் 310mm ட்வின் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் ஷோரூமை வந்தடைந்த ஹோண்டாவின் சக்தி வாய்ந்த பைக்!

ஹோண்டாவின் இந்த புதிய மாடல் ஹோண்டா சிபிஆர் 650ஆர் பைக்கில், 4 சிலிண்டர்கள் கொண்ட 649 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இது மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லக் கூடியது. இதன் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 7.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Friday, May 10, 2019, 13:56 [IST]
English summary
Honda CBR650R Reaches Showrooms Price Rs. 7.70 lakh. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out