ஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் பைக் ஷோரூம் திறப்பு!
ஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் பைக்குகளுக்கான முதல் பிரத்யேக ஷோரூம் குர்கானில் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா நிறுவனம் சாதாரண பைக் மாடல்கள் தவிர்த்து, ஏராளமான பிரிமீயம் பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா கோல்டு விங், ஆப்ரிக்கா ட்வின், சிபிஆர்300ஆர் உள்ளிட்ட பல மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், இந்த பைக்குகளுக்கு சந்தைப் போட்டியும் அதிகம் இருக்கிறது.

சந்தைப் போட்டியை சமாளித்து வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் எடுத்து வருகிறது. அதன்படி, பிரிமீயம் பைக்குகளுக்கு பிரத்யேக ஷோரூம்களை அமைக்க முடிவு செய்தது.

தனது விலை உயர்ந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கும் விதத்தில், பிரத்யேக ஷோரூம்களை அமைத்து வருகிறது. அதன்படி, ஹோண்டாவின் முதல் பிரிமீயம் பைக் ஷோரூம் ஹரியான மாநிலம், குர்கானில் திறக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா Big Wing என்ற பெயரில் இந்த பிரத்யேக ஷோரூம் அழைக்கப்படுகிறது. குர்கானை தொடர்ந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த புதிய ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன.

ஹோண்டா நிறுவனத்தின் சிபிஆர்300ஆர், சிபி1000ஆர், சிபிஆர்1000ஆர்ஆர் ஃபயர்பிளேடு எஸ்பி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் ஹோண்டா ஜிஎல்1800 கோல்டு விங் உள்ளிட்ட பல சூப்பர் பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படும்.

இது வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான சேவையை உறுதி செய்யும். மேலும், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையையும், சர்வீஸ் வசதியையும் பெற முடியும். மேலும், சந்தைப் போட்டியை சமாளிப்பதற்கும் இந்த பிரத்யேக ஷோரூம்கள் உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications








