ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஹோண்டா நிறுவனம் சிபி 650ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சிபி 300ஆர் மற்றும் சிபி 1000ஆர் ஆகிய இரண்டு நேக்கட் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ஹோண்டா சிபி 300ஆர் பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆதரவு கொடுத்துள்ளனனர்.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இதனை மனதில் வைத்து நடுத்தர வகையில் தனது சிபி 650ஆர் பைக் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக் கேடிஎம் 790 ட்யூக் மற்றும் கவாஸாகி இசட் 650 ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் இந்த புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளது.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மற்றும் வட்ட வடிவில் ஒளிரும் எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் செவ்வக வடிவில் எல்இடி விளக்குகள் போல ஒளிரும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஹெட்லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக வண்டியின் இயக்கம் மற்றும் இதர தகவல்களை பெற முடியும். இதன் பெட்ரோல் டேங்க்தான் பைக்கின் தோற்றத்தை பிரம்மாண்டமாக காட்டுகிறது. வால் பகுதி வழக்கம்போல் ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் டிசைனை பிரதிபலிக்கிறது.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 649 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள மாடலானது அதிகபட்சமாக 95 பிஎஸ் பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், இந்தியாவில் 84 பிஎஸ் பவரையும், 60 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய ஹோண்டா சிபி 650ஆர் பைக்கின் முன்புறத்தில் 41 மிமீ ஷோவா எஸ்எஸ்எஃப் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 4 காலிபர்களுடன் 310 டியூவல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் ஒற்றை காலிபருடன் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

ஹோண்டா சிபி 650ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய ஹோண்டா சிபி 650ஆர் பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2019, 10:12 [IST]
English summary
Honda Motorcycles is planning to launch CB650R middle weight naked style bike in India by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+