புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ரிபெல் 300 க்ரூஸர் பைக் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடந்த மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை காணலாம்.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

ஹோண்டா ரிபெல் 300 பைக் இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய மாடலாக இருந்து வருகிறது. ஏனெனில், ரிபெல் என்ற பெயருக்கு ஹோண்டா மோட்டார்சைக்ககிள் நிறுவனம் இந்தியாவில் காப்புரிமைக்கு பதிவு செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மாடல்களுக்கு போட்டியாக இது கருதப்படுகிறது.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக் மோட்டார் ஷோ மூலமாக தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய வண்ணங்களில் வந்துள்ளது. பியர்ல் கேடட் க்ரே, கேண்டி எனெர்ஜி ஆரஞ்ச், மேட் ஆக்சிஸ் க்ரே மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் அங்கு கிடைக்கும்.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 286சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.9 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

முன்புறத்தில் 41 மிமீ நீளமுடைய சாதாரண ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 121 மிமீ நகரும் வசதியுடைய இரட்டை ஷாக் அப்சார்பர்களுடன் கூடிய சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளன. பின்புற ஷாக் அப்சார்பரை 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

ஹோண்டா ரிபெல் 300 பைக்கின் முன்சக்கரத்தில் இரண்டு காலிபர்கள் கொண்ட 296 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இந்த பைக்கில் புதிய ஏபிஎஸ் சிஸ்டம் கொாடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட் மற்றும் நீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் ஆகியவை முக்கிய வடிவமைப்பு அம்சங்கள். இந்த பைக்கின் இருக்கை தரையிலிருந்து வெறும் 691 மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் க்ரூஸர் மாடலாக கூறலாம்.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

பொதுவாக, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் புதிய கார், பைக் மாடல்கள் அடுத்து இந்தியாவிலும் அறிமுகமாகும் வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில், இந்த புதிய ரிபெல் 300 பைக்கையும் இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்!

ரூ.2 லட்சம் விலையில் புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக்கை இந்தியாவில் எதிர்பார்க்கலாம். அதாவது, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மாடல்களுக்கு போட்டியாக கருதலாம். இந்த பைக்கின் டிசைன் இந்தியர்களை வெகுவாக கவரும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 6, 2019, 10:36 [IST]
English summary
Japanese motorcycle manufacturer Honda recently showcased the updated 2019 Rebel 300 cruiser motorcycle at the 2019 Bangkok Motor Show. The upgraded 2019 Honda rebel gets a few upgrades including three new clour options - Pearl Cadet Grey, Candy Energy Orange and Matte Axis Grey Metallic along with a new ABS module.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+