புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் 150சிசி ரக பைக் மாடல்களில் பல்சர் 150 பைக்கிற்கு சிறந்த மாற்று தேர்வாக ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் இருந்து வருகிறது.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் அம்சங்கள் குறித்த தகவல்களை காணலாம்.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் 150சிசி ரக பைக் மாடல்களில் பல்சர் 150 பைக்கிற்கு சிறந்த மாற்று தேர்வாக ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் இருந்து வருகிறது. இந்த சூழலில், வரும் ஏப்ரல் முதல் 125சிசி ரகத்திற்கு மேலான மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அதன்படி, தற்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாடலுக்கு ரூ.78,815 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

சாதாரண மாடலைவிட இது ரூ.6,500 கூடுதல் விலையில் வந்துள்ளது. இந்த பைக்கில் முன்சக்கரத்திற்கு மட்டுமான சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. புதிய மாடலில் ட்யூப்லெஸ் டயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

தோற்றத்திலும் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. ஆனால், முன்புற மட்கார்டு உள்ளிட்ட இடங்களில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாடல் என்பதை குறிப்பதற்கான சிறிய அளவிலான ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கில் 149.2 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 12.73 பிஎச்பி பவரையும், 12.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 ஏபிஎஸ் பைக் மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. 18 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் 80/ 100 -18 டயரும், பின்புறத்தில் 100/ 90 - 18 அளவுடைய டயரும் உள்ளன.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

சில்வர், சிவப்பு, கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் புதிய ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 ஏபிஎஸ் பைக் மாடல் கிடைக்கும். ஏபிஎஸ் அல்லாத மாடல் வரும் மார்ச் மாத இறுதி வரை விற்பனையில் இருக்கும் என்று தெரிகிறது.

புதிய ஹோண்டா யூனிகார்ன் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக்கிற்கு மாற்றாக புதிய வடிவமைப்பில் வந்த யூனிகார்ன் 160 பைக் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. எனவே, யூனிகார்ன் 150 பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Honda Unicorn 150 ABS launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X