கேடிஎம் 490சிசி இஞ்ஜினை கடன் பெறும் பிரபல பைக் நிறுவனம்... அது எந்த நிறுவனம் தெரியுமா..?

ஆஸ்திரிய நாட்டை மையமாகக் கொண்டு கேடிஎம் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம், இந்தியாவில் இளைஞர்களைக் கவர்கின்ற வகையில் ஸ்போர்ட்ஸ் மற்றும் நேக்கட் என பல ரக பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிறுவனத்தின் பிரபல 490சிசி திறன் கொண்ட எஞ்ஜினை பிரபல வெளிநாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம், அதன் மோட்டார்சைக்கிளில் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை மோட்டார்பீம் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், ஸ்வீடிஸ் நாட்டின் பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஹஸ்குவானாதான், அதன் ஒரு சில குறிப்பிட்ட பைக்குகளுக்காக எஞ்ஜினைப் பெறவிருக்கின்றது.

கேடிஎம் 490சிசி இஞ்ஜினை கடன் பெறும் பிரபல பைக் நிறுவனம்... அது எந்த நிறுவனம் தெரியுமா..?

ஏற்கனவே, 490சிசி பாரல்லல்-ட்வின் எஞ்ஜினை யுஎன்இ44 என்ற பைக்கின் கட்டமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் ட்யூக், ஆர்சி, அட்வென்சர், என்டியூரோ மற்றும் சூப்பர் மோட்டோ உள்ளிட்ட மாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த எஞ்ஜின் கூடுதலாக ஹஸ்குவர்ன மோட்டார்சைக்கிளின் 501 வரிசையிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

கேடிஎம் 490சிசி இஞ்ஜினை கடன் பெறும் பிரபல பைக் நிறுவனம்... அது எந்த நிறுவனம் தெரியுமா..?

501 வரிசையில், விட்பிலன் மற்றும் ஸ்வார்ட்பிலன் என்ற நேக்கட், சூப்பர் மோட்டோ மற்றும் என்டியூரோ உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு கேடிஎம் எஞ்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த 490 சிசி எஞ்ஜினை கேடிஎம் நிறுவனம், பஜாஜின் உதவியுடன் தயாரிப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த லிக்யூடு கூல்டு, 8 வால்வுகள் கொண்ட டீஓஎச்சி எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 55 முதல் 60 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

கேடிஎம் 490சிசி இஞ்ஜினை கடன் பெறும் பிரபல பைக் நிறுவனம்... அது எந்த நிறுவனம் தெரியுமா..?

ஆனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் 490சிசி எஞ்ஜின் அதிகபட்சமாக 43 பிஎஸ் திறனை வெளியேற்றுகின்றது. இந்த பாரல்லல் ட்வின் எஞ்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டு இயங்குகின்றது. இத்துடன், ஸ்லிப்பர், அசிஸ்ட் கிளட்ச் மற்றும் ரைட்-பை-திரோட்டில் திறன்களைக் கொண்டுள்ளது.

கேடிஎம் 490சிசி இஞ்ஜினை கடன் பெறும் பிரபல பைக் நிறுவனம்... அது எந்த நிறுவனம் தெரியுமா..?

501 வரிசையின்கீழ் தயாராகி வரும் ஹஸ்குவர்னா பைக்குகள் ரெட்ரோ ஸ்டைலில் (பழமையான தோற்றத்தில்) உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், விட்பிலன் மற்றும் ஸ்வார்ட்பிலன் ஆகிய மோட்டார் சைக்கிள்கள் விரைவில் புதிய கவர்ச்சிகரமான தோற்றத்தில், பாரம்பரிய லுக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேடிஎம் 490சிசி இஞ்ஜினை கடன் பெறும் பிரபல பைக் நிறுவனம்... அது எந்த நிறுவனம் தெரியுமா..?

அதேசமயம், தற்போது ​​ஹஸ்குவர்ணா வரிசையில் நிர்வாண ரோட்ஸ்டர் மாடல் பைக்குகள் இல்லாத காரணத்தால் இதில் ஏதேனும் ஒன்று நேக்கட் ரோஸ்டர் மாடலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Husqvarna Gets KTM 490 Engine for 501 Series. Read In Tamil.
Story first published: Monday, November 4, 2019, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X