புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ.. 1லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்று சாதனை

ஹூண்டாய் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த வெனியூ எஸ்யூவி ரக விற்பனையில் புத்தம் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

ஹூண்டாய் நிறுவனம் அதன் வெனியூ என்ற புத்தம் புதிய எஸ்யூவி ரக காரை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் யாரும் எதிர்பாராத மலிவு விலையில் களமிறக்கப்பட்டது. ஆகையால், உயர் ரக மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் வெனியூ காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

அந்தவகையில், வெனியூ கார் அறிமுகமான வெறும் ஏழு மாதங்களில் லட்சக் கணக்கான யூனிட்டுகளுக்கு புக்கிங் குவிந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வெனியூ காருக்கு கிடைத்துள்ள இந்த இமாலய வெற்றியின் காரணமாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் திகைத்துள்ளது. மேலும், இதுவரை இந்திய வாகனச் சந்தை சந்திக்காத புதிய வரலாற்றுச் சாதனையை அது செய்திருக்கின்றது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

காம்பாக்ட் எஸ்யூவி ரகத்தில் கிடைக்கும் இந்த கார் முழு முழுக்க இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்படுகின்றது. மேலும், இங்கிருந்துதான் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

தற்போது, இந்தியாவில் தயாராகும் ஹூண்டாய் வெனியூ கார்கள் இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இத்துடன், தெற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் காம்பாக்ட் ரக மாடலாக வெனியூ உள்ளது. தற்போது இந்த காருக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பிற்கு இதுவும் ஓர் காரணமாகவும்.

இதுமட்டுமின்றி, கன்னெக்டட் என்ற இணையதள தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் அறிமுகமான முதல் காராகும் வெனியூ காட்சியளிக்கின்றது. இதற்காக ப்ளூ லிங்க் என்ற பிரத்யேக டெக்னாலஜியை ஹூண்டாய் பயன்படுத்தியுள்ளது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

இந்த இணைய வசதி மட்டுமின்றி மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த காம்பேக்ட் எஸ்யூவி ரக காரில் இடம் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட், ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 8 இன்ச் அளவிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

மேலும், டைமண்ட் வடிவிலான அலாய் வீல்கள், ஸ்டியரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கூடுதல் பிரிமியம் வசதிகள் வெனியூ காரில் இடம்பெற்றிருக்கின்றது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

ஹூண்டாய் வெனியூ மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கினறது. அதில் இரண்டு பெட்ரோல் தேர்விலும், ஒன்று டீசல் எஞ்ஜின் தேர்விலும் கிடைக்கின்றது. இதில், டீசல் யூனிட் 1.4 லிட்டர் எஞ்ஜினில் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் ஸ்டாண்டர்டு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

இதேபோன்று, பெட்ரோல் தேர்வில் கிடைக்கும் இரு எஞ்ஜின்களில் ஒன்று 1.2 லிட்டரிலும், மற்றுமொன்று 1.0 லிட்டரிலும் கிடைக்கின்றது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின் ஸ்டாண்டர்டு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

இதேபோல், 1.0 லிட்டரில் கிடைக்கும் வெனியூவில் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்யூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

புதிய வரலாற்று சாதனை படைத்த மலிவு விலை வெனியூ... விரைவில் 1 லட்சம் யூனிட்டிற்கும் அதிகமான புக்கிங் பெற்ற முதல் கார்!

தொடர்ந்து, ஹூண்டாய் வெனியூ இ,எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஓ), எஸ்எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்எக்ஸ் பிளஸ் (ஓ) ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 6.50 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஹை வேரியண்டிற்கு ரூ. 11.1 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
Hyundai Venue Bookings Cross New Milestone: To Close At One Lakh Bookings Since Launch. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X